உச்சிதனை முகர்ந்தால் 13 வயது ஈழத் தமிழ் பெண்ணை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று மாலை 5.00 மணிக்கு லண்டன் குரொய்டனில் நடைபெறுகிறது. இந் நிகழ்வில் கலந்துகொள்ள பல பாடகர்கள் படகிகள் உட்பட சில நடிகர்களும் லண்டன் வந்துள்ளனர். இத் திரைப்படத்தில் உணர்வாளர்கள் சீமான், சத்தியராஜ் மணிவண்னன், மற்றும் நாசர் நடித்துள்ளனர். இன்று நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள நடிகர் சத்யராஜ் லண்டன் வந்தவேளை அதிர்வு இணையத்துக்கு அவர் பிரத்தியேக பேட்டி ஒன்றை தந்துள்ளார். அவருடன் இப்படத்தின் இயக்குனர் புகழேந்தியும் இது குறித்த நேர்காணல் ஒன்றைத் தந்துள்ளார்
.போர் குற்றத்தை ஆதாரமாக வைத்து இத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக இதன் இயக்குனர் புகழேந்தி தெரிவித்தார். இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச விருதுகளை தட்டிச் செல்லும் விதமாக இத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக