திசையன்விளை: திசையன்விளை அருகே இட்டமொழியில் மதிமுக சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை.
சட்டசபையில் எங்களுக¢கு பிரதிநிதித்துவமும் இல்லை. எங்களை நாங்களே கூர்படுத்திக¢ கொள்ள காமராஜருக¢கு விழா எடுக¢கிறோம். முல்லை பெரியார், ஸ்டெர்லைட், மீனவர் பிரச்னைகளுக்காக குரல் எழுப்புகிறோம்.
சமச்சீர் கல்வி திட்டத்தில் கேடான கொள்கைகளை இந்த அரசு கொண்டுள்ளது. பள்ளிகளில் எந்தப் பாடம் நடத்துவது என்றே இன்னும் தெரியவில்லை. இந்த போக¢கு தவறானது. கண்டனத்துக்குரியது.கோவை பஜாரில் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக¢ கொல்லப்படுகிறார். கேட்பாரில்லை. நாடு எங்கே போகிறது? பள்ளி, கல்லூரி மாணவர்கள் மதுக¢கடையில் வரிசையில் நின்று மது வாங்குகின்றனர். 15 நாட்களில் 3 கொலைகள் மதுவால் ஏற்பட்டுள்ளது.
தற்போது வருமானத்தை பெருக¢க விற்பனை வரி, வாட் வரி, துணிகளுக¢கு வரி என்று வரிசையாக வரிகளை இந்த அரசு போட்டுள்ளது. ஓட்டு போட்ட மக¢கள் தலையில் பாறாங்கல்லை தூக்கி வைக¢கின்றனர். இதை நாங்கள் தட்டிக் கேட்போம். இலங்கையில் இனப்படுகொலை செய்த ராஜபக¢சே தண்டிக¢கப்பட வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக