திமுக ஆட்சியின்போது உளவுப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த ஜாபர்சேட் உள்ளிட்ட 9 போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு நம்பிக்கைக்கு உரியவராக ஜாபர்சேட் கருதப்பட்டார். சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக தரப்புக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதையடுத்து இவரை நேரடியாக அழைத்து விசாரித்த தேர்தல் ஆணையம், மேற்குவங்கத்துக்கு தேர்தல் பார்வையாளராகச் செல்லும்படி உத்தரவிட்டது. எனினும் அங்குசெல்ல மறுத்த ஜாபர்சேட், விடுமுறையில் சென்றார்.
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஜாபர்சேட் மண்டபம் அகதிகள் முகாம் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இன்று காலை ஜாபர்சேட் உள்ளிட்ட 9 போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக