புதுடெல்லி: இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து அந்நாட்டுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்தியது. இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் போட்டோ பார்க்க
அதன்படி, கடந்த பிப்ரவரி முதல் இரு நாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் இந்தியா, பாக். வெளியுறவு செயலாளர்கள் 2 நாள் பேச்சு நடத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக