ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியாவை இந்து தேசமாகவே கருதினார் நரசிம்ம ராவ்'- மணிசங்கர் அய்யர்



Mani Shankar
டெல்லி: இந்தியா ஒரு இந்து தேசம் என்றே தான் கருதுவதாக முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் கூறியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறினார்.

காங்கிரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் என்பது குறி்த்து '24, Akbar Road' (டெல்லியில் காங்கிரஸ் தலைமையகம் அமைந்துள்ள முகவரி இது) என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், பாபர் மசூதி இடிப்புக்கு முக்கிய காரணம் நரசிம்ம ராவ் தான். மதசார்பின்மை என்ற விஷயத்திலேயே அவருக்கும் காங்கிரசுக்கும் பிரச்சனை இருந்தது.

நான் ராம்-ரஹீம் யாத்திரை நடத்தியபோது என்னிடம் பேசிய ராவ், மதசார்பின்மை என்ற கொள்கையே தனக்குப் புரியவில்லை என்றார். இந்தியா ஒரு இந்து தேசம் என்றே தான் கருதுவதாகக் கூறினார்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அது ஒரு தர்மஸ்தலா மாதிரி. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம், தங்கி இருக்கலாம், தூங்கி எழுந்துவிட்டு எழுந்து போகலாம். திரும்பி வரலாம்.

எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எல்லோரும் ஒரு குடைக்குள் வாழ முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமும் காங்கிரஸ் தான் என்றார்.

நிகழ்ச்சியில், 24, அக்பர் ரோடு என்றால் உங்களுக்கு நினைவுக்கு வருவது என்ன என்று பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய் கேட்க, அதற்கு பதிலளித்த அய்யர், நான் முதன்முதலில் தலைமையகத்தில் இருந்தபடி பணியாற்ற நேர்ந்தபோது, லேடீஸ் டாய்லெட்டுக்குப் பக்கத்தில் எனக்கு அறையை ஒதுக்கியிருந்தார்கள் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக