ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

எரியும் மாடிக் கட்டடத்தில் இருந்து குழந்தை உயிரைக் காப்பற்றிய வீரப்பெண்மணி



தாயின் கதறல் குரல் கேட்ட பிறகு தன்னுயிரை துச்சமாக மதித்து எரியும் கட்டிடத்துக்குள் புகுந்து உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றிய துணிகரச் சம்பவம் வடக்கு லண்டனில் நிகழ்ந்துள்ளது.

சுமார் 30 வயது மதிக்கத்தக்க  பெண்மணி தான் இந்த வீரச்செயலுக்கு சொந்தக்காரி. கட்டிடத்தினுள் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கமராவினால் இந்த காட்சி படம்பிடிக்கப்பட்டது. இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

பலராலும் பாராட்டப்பட்ட இந்த பெண்மணி இது என் கடமை என்று சாதாரணமாக சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு விலகிவிட்டார்.

விடுவார்களா மீடியாக்காரர்கள் அவரை துரத்தி துரத்தி ஒரு பேட்டியே எடுத்து விட்டார்கள்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக