கருணாநிதியின் திரைப்படங்கள், அறிக்கைகள் என்பவற்றை பார்த்து பழகியவர்களால் மட்டுமே இந்த பேட்டியை அனுபவிக்க முடியும் என நம்புகிறேன்..
நான்- கனிமொழியை ஸ்பெக்ரம் வழக்கில் கைது செய்து உள்ளனர்.. இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கருணா - [கேள்வி முடியும் முன்பே உணர்ச்சி வசப்பட்டு மறிக்கிறார்] என் கண்மணி நீ என் உடன் பிறப்பு நான் உன் உடன்பிறப்பு, நீ எனது ஆசைத் தம்பி நான் உன் பாசமுள்ள அண்ணன்.. கனிமொழி எனது மகள்.. நீ எனது தம்பி.. .[திரும்ப திரும்ப பேசுற நீ, திரும்ப திரும்ப பேசுற நீ],
எனக்கு தம்பியான உனக்கு கனிமொழி மகள் முறையானவள் அல்லவா, அவளை சட்டம் சந்தேகிக்கலாம் நீ சந்தேகிக்கலாமா? நீ சந்தேகித்தால் அதனை கம்பன் மன்னிப்பானா? அய்யன் வள்ளுவன் மன்னிப்பானா? இளங்கோவடிகள் மன்னிப்பானா? ஐயகோ என்ன கொடுமை என்ன கொடுமை, இந்த கொடுமைகளை காணச் சகிக்காமல் தான் சூரியன் கடலுக்குள் விழுகின்றானா?
இப்படி தான் ஒரு பெண்ணை மனிதர் குல மாணிக்கத்தை, பெண்கள் குல திலகத்தை, கண்ணகி எனும் காவியத்தை வரலாறு சந்தேகித்ததே, அதை விடவா இது மோசம், சொல்லடா என் கண்மணி, என் பொன்மணி, கண்ணகியின் சாபத்தால் மதுரையே பற்றி எரிந்தது உனக்கு தெரியும், பொறுத்து இருந்து பாரடா என் கண்மணி கனிமொழியின் சாபத்தால் திகார் சிறையே பற்றி எரியப் போகிறது..
நான்- [தண்ணியை குடி... தண்ணியை குடி] அப்ப தலைவரே கைது செய்த சிபிஐ காரன் கேனையன் என்கிறீர்களா?
கருணா- கேனையன் என்று சொல்லவில்லயடா என் கண்மணி கேனையனாக இருக்கலாம் என்கிறேனடா.. என் ஆசை உடன் பிறப்பே [இரண்டிக்கும் என்ன வித்தியாசம்?]
நான்- அப்ப தலைவா சிபிஐயே வேணாம் என்கிறீர்களா?
கருணா- சிபிஐ வேணாம் என சொல்லவில்லை.. சிபிஐ கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக் கூடாது என்பதால் சொல்கிறேன்.
நான்- அது சரி காங்கிரஸ் கூட்டணி பற்றி தன் மானத்துடனும் சுய மரியாதையை உடனும் திமுக தலைவர் கருணாநிதி முடிவு எடுக்க வேண்டும் என வீரமணி கூறியுள்ளது பற்றி?
கருணா- வைச்சு கிட்டாடா நான் வஞ்சகம் பண்ணுறேன்...
நான்- கனிமொழி கைதில் சோனியா காந்தி ..... [கேள்வி கேட்கும் போதே இடை மறிக்கிறார்]
கருணா- சோனியா சோனியா என்றால் உதடுகள் கூட ஒட்டாதடா, கனிமொழி கனிமொழி என்றால் தான் உதடுகள் கூட ஒட்டுமடா என் கண்மணி , என் பொன்மணி , என் போண்டாமணி (நான் என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டாது, நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஓட்டும் - # கருணாநிதியின் இந்த சிந்தனைத் துளியை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பஸ்களில் காணலாம்)
நான்- ஈழத் தமிழர் பிரச்சனையில் திமுகவின் நிலைப்பாடு தான் என்ன?
கருணா- ஈழ தமிழர்களிற்கு தனி தமிழீழம் அமைத்துக் கொடுக்க திமுக என்றும் போல் எல்லா வகையிலும் உடன் நிற்கும்.. [சிரிக்காமல் சீரியசாக காமடி பண்ணுகிறார்]
நான் - நீங்கள் ஈழத்தமிழர் பிரச்சினையின் போது அவர்களுக்கு ஆதரவாக எதுவும் செய்யவில்லை என பரவலான குற்றச்சாட்டு ஒன்று உள்ளதே... அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கருணா - ஐயகோ.. இதைக் கேட்கும் போது என் நெஞ்சு கொதிக்கிறதடா என் கண்மணி.., நான் ஈழத்தமிழர்களுக்காக மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தியதை என் கண்மணி நீ அறியா விட்டாலும் இந்த வரலாறு அறியுமடா என் பொன்மணி...,
பொக்கிஷம் படத்தில் பத்மப்பிரியாவுக்கு சேரன் எழுதிய கடிதங்களை விட மன்மோகன் சிங்குக்கும் சோனியாவுக்கும் ஈழத் தமிழர் போராட்டத்தை ஆதரித்து அங்கு நடக்கும் இனப்படுகொலையை எதிர்த்து நான் எழுதிய கடிதங்கள் வரலாறு அறியுமடா...
இதையெல்லாம் தாண்டி என் உயிரைக் கூடத் துச்சமென மதித்து மூன்று மணிநேரம் நான் இருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை நீ மறக்கலாமாடா? இப்போது கூடச் சொல்லுகிறேன் ஈழத்தமிழர்களுக்காக அந்த மூன்று மணி நேர உண்ணாவிரதத்தில் நான் இறந்து போகவில்லை என்பது தான்.. இன்றும் என் நெஞ்சில் தைத்துக் கொண்டிருக்கின்ற ஒரே முள்... நான் உள்ளுக்குள் ஊமையாக அழுவது உனக்குத் தெரியுமாடா என் கண்மணி...
நான்- விஜயகாந்திற்கு மாற்றாக வடிவேலை நினைத்த உங்களின் அரசியல் சாணக்கியத்தைப் பற்றி?
கருணா- கூடா நட்பு கேடில் முடியும்...
நான்- உடன்பிறப்புகளிற்கு தாங்கள் சொல்ல விரும்புவது?
கருணா- தமிழகத்தில் மஜோரிட்டி போனால் என்னடா என் கண்மணி, திகாரில் [சிறையில்] நாங்கள் தானடா மஜோரிட்டி. மனதை தளர விடாதே என் ஆசை உடன் பிறப்பே திகாரில் ஆட்சி அமைப்போம்....
நான்- இறுதியாக தங்களிடம்... தேர்தல் முடிவுகளால் மூக்கு உடைபட்டு தாங்கள் முதல் அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டதை பற்றி?
கருணா- மக்கள் எனக்கு சிறந்த ஓய்வை தந்துள்ளனர், என கெத்தாக கூறிய தமிழின தலைவர் கருணா, திடீரென "எவ்வளவு நேரம் தான் நானும் வலிக்காதவன் மாதிரியே நடிக்கிறது என கூறியவாறு மஞ்சள் துண்டை வாய்க்குள் வைத்தவாறு விக்கி விக்கி அழ ஆரம்பிக்கிறார்.
(குறிப்பு - கருணாநிதியின் மனதைத் தவிர வேறு யார் மனதையும் புண்படுத்த அல்ல... - யாவும் கலப்படமற்ற கற்பனை)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக