ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

வாக்காளர்களுக்கு அ தி மு க கொடுத்த அன்பு பரிசு!! கலைஞர் ?


சமச்சீர் கல்வி பிரச்சனையும், வரிச்சுமையும் வாக்களித்த மக்களுக்கு அதிமுக அரசு அளித்துள்ள பரிசு என, திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கலைஞர், திமுக திராவிடர்களின் நலனுக்காக எப்போதும் பாடுபடும் இயக்கம் என்று கூறினார்.

விலைவாசி வெகுவாக உயர்ந்துள்ள நிலையில் 3 ஆயிரத்து 900 கோடி ரூபாய்க்கு வரிகளில் அதிமுக அரசு மாற்றம் செய்து சுமையை ஏற்றி இருப்பதும், சமச்சீர் கல்வி பிரச்சனையில் பள்ளிகள் திறந்து இரண்டு மாதமாகியும், பாடம் படிக்க இயலாமல் மாணவர்களும், பெற்றோர்களும் தள்ளாடுவதற்கும் அதிமுக அரசுக்கு வாக்களித்த மக்களே காரணம் என்று கலைஞர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்கள் திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்படும். மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்தும், திமுக பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக