ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பேஸ்புக்கில் வீடியோ சாட்டிங் செய்வது எப்படி?


பேஸ்புக்கில் வீடியோ சாட்டிங் செய்வது எப்படி?தனது பாவனையாளர்களுக்கு அதிரடியாக வீடியோ சாட்டிங்க் செய்யும் வசதியை தந்துள்ளத. இதை எவ்வாறு செயற்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.
1. முதலில் பேஸ்புக்கில் லாகின் செய்தபின்னர் கீழுள்ள  இணைப்புக்குச் சென்று Get Started என்பதை கிளிக் செய்யுங்கள் https://www.facebook.com/videocalling


2. கணினியில் பேஸ்புக்கினால் தரப்படும் புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்து  நிறுவ வேண்டும்.
3. நிறுவி முடித்ததும் வழமையான சாட் விண்டோவில் புதிதாக தோன்றும் கமெரா ஐகானை கிளிக் செய்யுங்கள். ( Flash ஐ செயற்படுத்த அனுமதிக்க வேண்டும்.)
4.கமெரா ஐகானை கிளிக் செய்து வீடியோ சாட்டை ஆரம்பித்தால் மறுமுனையில் இருப்பவர் பதிலளிக்கும் வரை வீடியோ தெரியாது.
5.இனி பேஸ்புக்கில் இருந்தபடியே நண்பர்களுடன் வீடியோ சாட்டிங் செய்து மகிழலாம்.
குறிப்பு – வீடியோ கால் ரெக்காட் செய்யும் வசதியும் உள்ளதாம். அதுவும் உங்களுக்கு சரியாக வேலை செய்தால் அது பற்றி மற்றவர்களுடன் பகிருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக