ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

முகமில்லா மனிதனுக்கு அறுவைச்சிகிச்சை வெற்றி..!(படங்கள் இணைப்பு)

முகமில்லா மனிதனுக்கு அறுவைச்சிகிச்சை வெற்றி..!(படங்கள் இணைப்பு)ஜோஸ் மிச்ற்றே என்ற 51 வயது நபர் முகம் முழுவதும் கட்டிகளை கொண்டுள்ளார்.இந்த கட்டிகள் அவரது முகம் முழுவதையுமே மறைக்கிறது. அந்த நபரின் முகத்தில் அவரது ஒற்றைக்கண் மட்டுமே வெளியில் தெரியக் கூடியதாக இருக்கிறது. சிறு வயதில் இந்த நபர் அழகான முகதோற்றதையே கொண்டிருக்கிறார்.இடையிலேயே இவரது முகம் இவ்வாறு விகாரம் அடைந்துள்ளது. அவர் தினமும் கடும் சோதனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
தினமும் உணவு உண்பதே அவர் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இவரின் இந்த கட்டிகள் முக மட்டத்தில் இருந்து 15 inches உயரம் கொண்டதோடு அவற்றின் மொத்தநிறை 12 poundsகள் ஆகும்.
ஆனால் இந்த நபர் அறுவைச்சிகிச்சை மூலம் தனது முகத்தில் உள்ள மேலதிக சதைகளை அகற்றியுள்ளார். கிட்டத்தட்ட மூன்ற மாதங்கள் இதற்காக செலவிட்டுள்ளார் இவர் இவருடைய தற்போதை முகத்தோற்றத்தினை படத்தில் காணலாம். இவருடைய இந்த மாற்றத்தற்கு தனது சகோதரி பெரிதும் உதவியதாக கூறுகிறார். அவர் இல்லாமல் தான் வாழமுடியாது எனவும் எனக்கு அனைத்தும் உதவிகளும் தனது சகோதரி எனவும் கூறியுள்ளார் இவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக