‘நூடுல்ஸ் என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம். பெரியவர்களும் வெளுத்துக்கட்டுகின்றனர். இதனால், நூடுல்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது. குடிசைத்தொழிலாக நூடுல்ஸ் தயாரித்து நிறைந்த லாபம் பார்க்கலாம்’ என்று கூறுகிறார் கோவை அஜ்ஜனூரை சேர்ந்த பூமாலை. அவர் கூறியதாவது: சொந்த ஊர் ஊட்டி. மதுரை காமராஜர் பல்கலையில் எம்ஏ பொது நிர்வாகவியல் படித்துள் ளேன். திருமணமான பின், கண வர் மற்றும் குழந்தைகளுடன் வசிக்கிறேன். சிறுவயது முதலே சுய தொழில் செய்து சாதிக்க வேண்டும் என்று ஆசை.
பெரும்பாலானோர் விரும்பும் நூடுல்ஸ் தயாரிக்க முடிவெடுத்தேன். கோவை வேளாண் பல்கலையில் நூடுல்ஸ் தயாரிப்பு பயிற்சி அளிப்பதை அறிந்து அங்கு ஒரு மாதம் பயற்சி பெற்றேன். பின்னர் இத்தொழிலில் ஈடுபட்டேன். கடந்த 10 ஆண்டுகளாக நூடுல்ஸ் தயாரித்து விற்கிறேன். தினமும் 200 கிராம் கொண்ட 600 பாக்கெட்களை பல்வேறு பிராண்ட் நிறுவனங்களுக்கு விற்கி றேன். அதை வாங் கும் நிறுவனங்கள் தங் கள் நிறுவன பெயரில் விற்கின்றனர்.
சோயா, கம்பு, தக்காளி, கீரை, ராகி என பல்வேறு வகை நூடுல்ஸ்கள் தயாரிக்கிறேன். புதிய சுவைகளிலும் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். புதுப்புது வகைகளை அறிமுகப்படுத்துவதால் ஆர்டர்கள் குவிகின்றன. குறைந்த முதலீட்டில் குடிசைத் தொழிலாக யார் வேண்டுமானாலும் நூடுல்ஸ் தயாரித்து, தங்கள் பகுதியில் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கலாம்.
தயாரிப்பது எப்படி?
பெரிய பாத்திரத்தில் 40 கிலோ மைதா, 30 கிலோ கோதுமை மாவு, 7 லிட்டர் தண்ணீர் ஊற்றி புரோட்டா மாவு பதத்தில் பிசைய வேண்டும். மாவை பதப்படுத்தும் இயந்திரத்தில் போட்டால், சன்னமாக தேய்த்து, ரோல் செய்யும். அதை அதே இயந்திரத்தில் பொருத்தினால், தேய்க்கப்பட்ட மாவு வெட்டப்பட்டு நூல், நூலாக வெளியேறும். அதைக் கம்பியில் தொங்க விட்டு, வேக வைக்கும் பாய்லருக்குள் வைத்தால், 40 முதல் 50 நிமிடம் வேகும். அவற்றை தேவையான அளவுகளில் எடை போட்டு, டிரேயில் வைத்து வெயிலில் ஒருநாள் உலர்த்த வேண்டும்.
பின்னர், அவற்றை பேக்கிங் செய்தால் நூடுல்ஸ் தயார். பேக்கிங் பாக்கெட்டுக்குள், நூடுல்ஸ் சமைக்கும் போது சுவையூட்டும் மசாலா பொடி பாக்கெட்டும் இணைக்க வேண்டும். கம்பு, ராகி, தக்காளி நூடுல்ஸ் போன்றவை தயாரிக்கவும் இதே முறை தான். சோயா நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமை அளவுகளுடன் கூடுதலாக 30 கிலோ சோயா மாவு, 3 லிட்டர் தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்.
கம்பு, ராகி நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமையுடன் 30 கிலோ கம்பு அல்லது ராகி சேர்க்க வேண்டும். தக்காளி நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமையுடன் தக்காளி சாறு குறிப்பிட்ட அளவில் சேர்த்து பிசைய வேண்டும். தக்காளிகளை அவ்வப்போது வாங்கி தோல் நீக்கி, சாறு பிழிந்து பயன்படுத்த வேண்டும்.
கிடைக்கும் இடம்
மாவை பதப்படுத்தி, வெட்டும் இயந்திரம், வேக வைக்கும் பாய்லர் இயந்திரம், உலர்த்தும் டிரையர் ஆகியன வேளாண் பல்கலையின் வணிக மேம்பாட்டு மையம் மூலம் கிடைக்கும். கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வடிவமைத்து நேரிலும் வாங்கலாம்.
தளவாட சாமான்களான எடை போடும் கருவி, பேக்கிங் கவர், பேக்கிங் சீல் மெஷின், கத்தரிக்கோல் ஆகியவை எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. கோதுமை, மைதா, சோயா, கம்பு, ராகி ஆகியவற்றை மொத்த கடைகளில் மாவாக அல்லது விவசாயிகளிடம் நேரடி யாக கொள்முதல் செய்து அரவை மில்லில் அரைத்து கொள்ளலாம்.
முதலீடு
பதப்படுத்தும் இயந்திரம் ரூ. 1.9 லட்சம், வேகவைக்கும் பாய்லர் இயந்திரம் ரூ.1 லட்சம், 50 கிலோ நூடுல்ஸ் வைக்கும் உலர்த்தும் டிரே 25 எண்ணிக்கை ரூ. 25 ஆயிரம். மற்ற தளவாட சாமான்கள் ரூ. 15 ஆயிரம்.
கட்டமைப்பு
இயந்திரங்களை நிறுவ, பொருட்களை இருப்பு வைக்க, ட்ரேயில் அடுக்க, பேக்கிங் செய்ய, மற்றும் அலுவலகத்திற்கு 25க்கு 25அடி நீள, அகலமுள்ள இடம். வாடகை இடமாக இருந்தால் அட்வான்ஸ் ரூ. 20 ஆயிரம்.
உற்பத்தி செலவு
ஒரு நாளில் 200 கிராம் கொண்ட 600 பாக்கெட்கள் வீதம் (120 கி) 25 நாளில் 15 ஆயிரம் பாக்கெட்கள் (3 ஆயிரம் கிலோ) தயாரிக்கலாம். கோதுமை, மைதா உள்ளிட்ட மாவுப்பொருள்கள், 4 ஊழியர்கள் சம்பளம் (ரூ. 20 ஆயிரம்), மின்கட்டணம் (ரூ. 7 ஆயிரம்), இட வாடகை (ரூ. 2 ஆயிரம்), போக்குவரத்து செலவு (ரூ. 3 ஆயிரம்) என ரூ. 1.50 லட்சம் ஆகும். தொழில் துவங்க துவக்கத்தில் முதலீடு, கட்டமைப்பு மற்றும் உற்பத்திக்கு ரூ. 5 லட்சம் போதும்.
வருவாய்
15 சதவீதம் லாபத்திற்கேற்ப விலை நிர்ணயித்து தனியார் நிறுவனங்களுக்கு விற்பதால் மாதம் ரூ. 22,500 லாபம் கிடைக்கும். சில்லரை விற்பனை நிலையங்களுக்கு நேரடியாக விற்பனை செய்தால் லாபம் அதிகரிக்கும்.
சந்தை வாய்ப்பு
அவசர, அத்தியாவசிய உணவு தயாரிப்புக்கு நூடுல்ஸ் தேவை அதிகமாகி வருகிறது. மணம், சுவை, தரம் ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடித்தால் தொடர்ந்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம். சில்லரை, மொத்த வியாபார பலசரக்கு கடைகள், டிபார்ட் மென்ட் ஸ்டோர்கள், பிராண்டட் நிறுவனங்கள் நூடுல்ஸ் வாங்கள் தயாராக இருக்கின்றன.
எங்களுக்கு நூடுல்ஸ் தாயாரிப்பு முறை மற்றும் பயிற்சி எங்கு கிடைக்கும் மற்றும் இதற்கு அரசு மானியம் கிடைக்குமா? தயவு செய்து 9788080878 அழைக்கவும் அல்லது மின்னஞ்சல் பகிரவும். நன்றி கடலூர் சி.ஜெயபிரகாஷ்.
பதிலளிநீக்கு