ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ராசா திடீர் பல்டி


.
tamil news, tamil news paper, tamil news paper, tamil daily newspaper, tamil daily, Tamil News Papper புதுடெல்லி,: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமர் மற்றும் அப்போதைய நிதியமைச்சர் மீது குற்றம்சாட்ட வேண்டும் என்று கோரவில்லை என முன்னாள் அமைச்சர் ஆ.ராசா திடீரென பல்டி அடித்துள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு தொடர்பான வாதம் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா சார்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிய அவரது வழக்கறிஞர் சுஷில்குமார், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் பிரதமர் மற்றும் அப்போதைய நிதியமைச்சருடன் விவாதித்த பிறகே முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

பிரதமர் மீதும், அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீதும் குற்றம்சுமத்தி ஆ.ராசாவின் வழக்கறிஞர் வாதிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், ஆ.ராசாவின் வழக்கறிஞர் சுஷில்குமார் இன்று மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.ஷைனி முன்னிலையில் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது அவர் 2ஜி வழக்கில் பிரதமர் மீதும், அப்போதைய நிதியமைச்சர் மீதும் குற்றம் சுமத்த வேண்டும் என்று தான் கோரவில்லை என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பத்திரிகைகளில் வந்த செய்திகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த சுஷில்குமார், நான் என் கட்சிக்காரருக்காக வாதாடுகிறேன். யாரையும் குற்றம்சாட்டவில்லை என்று குறிப்பிட்டார்.
இத்தகைய சூழ்நிலையை தடுக்கும் வகையில் அமெரிக்காவின் நீதிமன்ற நடவடிக்கைகள் ஒளிபரப்பு செய்யப் படுவதையும் அவர் குறிப்பிட்டார்.

குற்றப்பத்திரிகை குறித்து தெரிவித்த சுஷில்குமார் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க அனுமதியளிக்கப்பட்டது தவறானது என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் நேற்று வாதாடிய ஆ.ராசா தன் மீது ஊழல் குற்றச்சாட்டு கள் சுமத்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
2ஜி ஸ்பெக்ட்ரமை ஏலம் விடுவ தில்லை என்று எடுத்த முடிவு அரசு எடுத்த முடிவு என்றும், முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி யில் இருந்து பின்பற்றப்பட்ட முடி வைத்தான் தானும் பின்பற்றியதாக ஆ.ராசா குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தை சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்று ஆ.ராசா சார்பில் நீதிமன்றத்தில் அவருடைய வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக