சென்னை: பாமகவைத் தொடர்ந்து திமுக கூட்டணியை விட்டு விடுதலைச் சிறுத்தைகளும் விலக முடிவு செய்துள்ளது.
திமுக கூட்டணியை விட்டு விலகி பாமக தலைமையிலான புதிய அணியில் சேருவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், பாமக தலைவர் ராமதாஸ் அழைப்பு விடுத்தால், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, பாமக கூட்டணியில் சேர்வது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேராமல், மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பது எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய யோசனை.
இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடமும் பேசியிருக்கிறேன்.
தற்போது என்னுடைய எண்ணத்தின்படி, பாமக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. ராமதாசின் இந்த முடிவை வரவேற்கிறேன். ராமதாஸ் அழைப்பு விடுத்தால், எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து, பாமக அணியில் சேர்வது பற்றி முடிவு செய்யப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக