
அதில், தெற்கு சூடானுக்கு இந்தியா தூதரக அங்கீகாரம் வழங்கி உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், விழாவில் பங்கேற்ற துணை ஜனாதிபதி அமீது அன்சாரி கூறும்போது, ஜுபாவில் தொடங்க இருக்கும் இந்திய தூதரக அலுவலகத்தில் பணிபுரிய தூதர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றார்.
விழாவில், பிரதமர் மன்மோகன் சிங் கொடுத்து அனுப்பிய கடிதத்தை தெற்கு சூடானின் புதிய அதிபர் ஜெனரல் சால்வா கீர் மயார்தித்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதை சூடானுக்கான இந்திய தூதர் ஏ.கே. பாண்டே, வெளியுறவு அமைச்சக செயலாளர் சஞ்சய் சிங் ஆகியோர் ஒப்படைத்தனர்.
ஏற்கனவே, இங்கு இந்திய பிரதிநிதி அலுவலகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக