சூடானை சுற்றியுள்ள நாடுகளில் கலவரம் நடந்து வருகிறது. எனவே அங்கு வாழும் மக்கள் அகதிகளாக பக்கத்து நாடுகளுக்கு குடி பெயர்ந்து வருகிறார்கள்.
அது போன்று சுமார் 200 பேர் ஒரு படகில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களது படகு சூடான் கடற்பகுதியில் செங்கடலில் சென்றபோது திடீரென மூழ்கியது.
எனவே அதில் பயணம் செய்த அனைவரும் மூழ்கினர்.இதுபற்றி சூடான் கடற்படையினருக்கு தெரிய வந்தது. உடனே மீட்பு படையினர் அங்கு சென்றனர். இருந்தும் படகில் பயணம் செய்த 3 பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.
மற்ற 197 பேரை மீட்க முடியவில்லை. எனவே அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த படகு எங்கிருந்து புறப்பட்டு வந்தது என தெரியவில்லை. அது மூழ்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடை பெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக