அவற்றை மீட்புக்குழுவினர் கைப்பற்றினார்கள். பல்கேரியாவை சேர்ந்த பிரமாண்ட சுற்றுலா படகு 197 பேருடன், ரஷ்யாவின் வோல்கா ஆற்றுப் பகுதியில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது.
மதிய உணவு இடைவெளிக்கு பின், 59 குழந்தைகள் படகின் மையத்தில் உள்ள விளையாட்டு பகுதிக்கு விளையாடச் சென்றனர்.
அப்போது படகு எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கியது. இதையடுத்து நடந்த மீட்பு பணியில் 80 பேர் காப்பாற்றப்பட்டனர்.
12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் நேற்று ஈடுபட்டனர்.
ஆற்றில் மூழ்கி கிடக்கும் படகில் 100க்கும் அதிகமான சடலங்கள் இருப்பதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பலியான 128 பேரில் பலர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படகு விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
விபத்துக்குள்ளான படகு, 56 ஆண்டுகள் பழமையானது. இதன் இரண்டு டீசல் இன்ஜின்களில் ஒன்றில் பிரச்னை இருந்ததும் தெரியவந்துள்ளது.
இது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக