ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

எம்.ஜி.ஆர். படத்துக்கு கட்அவுட்-பேனர்கள் பெங்களூரில் 11 தியேட்டர்களில் ரிலீஸ்




என்றென்றும் எம்.ஜி.ஆர்.   படங்கள் வசூலை அள்ளித்தருகின்றன.  அதனால் எம்.ஜி.ஆரின் பழைய படங்கள் சென்னையில் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.
“நினைத்ததை முடிப்பவன்”, “ஆயிரத்தில் ஒருவன்”, “அடிமைப்பெண்”, “நாடோடி மன்னன்”, “உலகம் சுற்றும் வாலிபன்”, “நேற்று இன்று நாளை”, “எங்க வீட்டுப்பிள்ளை” உள்ளிட்ட பல படங்கள் இங்கு தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.



இதுபோல் கர்நாடக மாநிலம் பெங்களூரிலும் எம்.ஜி.ஆரின் “அடிமைப் பெண்” படம் 11 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்துக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குடும்பத்தோடு திரண்டு வந்தனர்.

படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் கொடி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆர். கட்அவுட்டுகள், பேனர்கள் ரசிகர்கள் வைத்து இருந்தனர். ஆயிரம் மாலைகள் அணிவிக்கப்பட்ட பேனரும் வைத்திருந்தனர். பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.

படம் பார்க்க வந்தவர்களுக்கு பிரியாணி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக