மெய்யான யோகிகள் நிறையவே இருந்திருக்கிறார்கள் ..அனால் அவர்கள் யாரையும் தன்னைப்பின்பற்றச் சொல்லவோ... ஆசிரமம் அமைத்து சுகவாழ்வு வாழவோ இல்லை.
சுமார் 18 கோடி ரூபாய் செலவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மின்விசிறிகள், மேடைகள் முதலிய தடபுடல் ஏற்பாடுகள்.
தொலைக்காட்சி ஊடகங்கள், ஏடுகள் இவற்றுக்கு அபார விளம்பரங்கள் தருவதோடு, இப்படி இரட்டை வேடதாரிகள் “தூய யோவான்களாகவும் சித்திரித்து, படித்த பாமரர்களையும் ஏமாற்றிடத் துணை போகின்றன ஹிந்துத்துவா சக்திகள்!
அரசியலில் ஊழலை ஒழிக்குமுன் ஆன்மீகத்தைச் சரி செய்யுங்கள்!
அரசியலைத் தூய்மைப்படுத்தும் முன்பு இவர்கள் சார்ந்த ஆன்மீகம், மதங்களில் அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, மோசடிகளைத் தடுத்து நிறுத்த முதலில் உழைக்க வேண்டாமா?
அப்பாவி மக்களைக் கவருவதற்காக கறுப்புப் பணம், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை கொண்டு வருதல் போன்ற பல்வேறு திட்டங்களை முன் வைத்து மத்திய அரசாங்கத்தை “பயமுறுத்திட” இப்படி ஒரு உண்ணாவிரத நாடகத்தைத் துவக்கி, ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதால் நடத்திட முன் வந்துள்ளனர்; பாபா ராமதேவ், அன்னாஹசாரே போன்றவர்கள் புதிய அவதாரங்கள்!
மத்தியில் உள்ள அய்க்கிய(அ)யோக்கிய முற்போக்குக் கூட்டணி குறிப்பாக காங்கிரஸ் தலைமையில் உள்ள ஆட்சிக்கு எதிராக பா.ஜ.க. காவி ஆட்சியை மீண்டும் கொண்டு வரவே இப்படிப்பட்ட திடீர் ஊழல் ஒழிப்பு திடீர்க் காட்சிகள்!
டில்லியில் இதில் அரசியல்வாதிகள் மேடையில் இருக்க அமைதிக்கப்பட மாட்டார்களாம்! மாறாகக் கலந்து கொள்பவர்கள் யார் யார் தெரியுமா?
1. விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால்.
2. சாத்வி ரிதம்பரா
3. ஆர்.எளி.எளி.அமைப்பினர்
4. இந்து அமைப்புகள்.
பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்., இதில் அசோக் சிங்கால், சாத்வி ரிதம்பரா போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டவர்கள்; ஜளிடீளி லிபரான் கமிஷன் என்ற அறிக்கையை காங்கிரளி கட்சி செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதே! அதிலும் அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கிலும் இவர்கள் எல்லாம் உள்ளனர்!
இதை அய்க்கிய (அ)யோக்கிய முற்போக்கு முன்னணி ஆட்சித் தலைமை, பிரதமர், அமைச்சர்கள் எவருமா புரிந்து கொள்ளவில்லை?
ஊழலை ஒழிக்க தயங்காது என்று கூறும் மத்திய அரசு தலைமை, இந்த சாமியார்களிடம் ஏன் கெஞ்ச வேண்டும் அமைச்சர்களை தூது அனுப்பி இதை நிறுத்திடும்படிக் கெஞ்சுதல், கொஞ்சுதல் செய்ய வேண்டும்? அவ்வளவு பலவீனமான அரசாக இயங்குவது நல்லதா? இந்த அரசாங்கம் எதற்கு.
இந்த அரசியல் அலங்கோலங்கள்பற்றி நினைத்தால் ஜனநாயகம் இப்படி கேலிக் கூத்தாக்கப்படுகிறதே என்று எண்ணி வேதனைப்பட வேண்டியுள்ளது!
மீண்டும் காவிகள் அரியணை ஏறவே இந்த ஆயத்தங்கள் என்பதை புரிய வைக்க வேண்டியது முற்போக்குச் சிந்தனை உடைய தலைவர்களின் கடமையாகும்.
பார்பன பத்திரிக்கைகளும் ஒத்து ஊதுகிறது. சிந்திக்கவு: ராம்தேவ் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதால் ஊழலை ஒழித்து விட முடியாது. இவர் யோகா ஒருவியாபாரி, இவர் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் யோகா பயிற்சியாளர்.
ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் அரசியல் முகமுடி பாரதிய ஜனதா பார்ட்டி. அந்த கட்சி இந்தியாவில் செத்தபாம்பாகி போன நிலையில், இந்த செத்த பாம்பு ஒரு ஓலை பாம்பை காட்டி அரசை பயம் காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.
ஊழலை உண்மையில் ஒழிக்க யார் புறப்பட்டாலும் அவருக்கு நமது வாழ்த்துக்கள். அதே நேரம் இதை அரசியலாக்கி ஆதாயம் தேடநினைக்கும்
ஹிந்துத்துவா மதவெறி கட்சிகளை நாம் அனுமத்திக்க முடியாது.
இந்த சாமியார் ராம்தேவ் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து 1100 கோடிகளுக்குமேல் எப்படி அதிபதி ஆனார். ஒரு பண்டார, பரதேசிக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது.
நிச்சயம் நியாயமான முறையில் சம்பாதித்ததாக இருக்க முடியாது என்பது உண்மை. இந்த சாமியாரை ஹிந்துத்துவா களம் இறக்கியிருப்பதால் இந்த பார்பன நாளிதழ்கள் இவரை தூக்கி பிடிக்கின்றன அவ்வளவே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக