ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

வெந்தயத்தின் கிளுகிளு ரகசியம்!


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper வெந்தயம், ஆண் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. வத்தக்குழம்பில் ஆரம்பித்து ஊறுகாய், மிளகாய் பொடி, மசாலா பொடி என பல வகையான இந்திய உணவுகளிலும் பயன்படுவது வெந்தயம். சித்த மருத்துவத்தில் பல்வேறு வகையான நோய்களுக்கும் இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
உடல் சூடு, வயிற்று புண், வாய்ப்புண் ஆகியவற்றை வெந்தயம் கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது. சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்கும் மருந்தாக வெந்தய பவுடர் பயன்படுத்தப்படுகிறது.

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள், ஆண் ஹார்மோன் உற்பத்தியில் வெந்தயத்தின் பங்கு தொடர்பாக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் உள்ள மருத்துவ ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. நல்ல உடல்நலத்துடன் இருக்கும் 25&52 வயதினர் 60 பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். தினமும் 2 வேளை என ஒன்றரை மாதத்துக்கு அவர்களுக்கு வெந்தய சாறு கொடுக்கப்பட்டது. அவர்களது ஹார்மோன் அளவு, செக்ஸ் ஆர்வத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. இன்னொரு குரூப்புக்கு டம்மி சாறு கொடுக்கப்பட்டது.

வெந்தய சாறு கொடுத்தவர்களின் ஹார்மோன் அளவு 28 சதவீதம் உயர்ந்துள்ளது. வெந்தயத்தில் உள்ள சபோனின் பொருள், ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது. உணவில் போதுமான அளவு வெந்தயம் சேர்த்துக் கொண்டால் செக்ஸ் வாழ்க்கை முழு மகிழ்ச்சியுடன் இருக்கும் என்கிறது ஆய்வு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக