தி ஹேக்: பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மற்றும் மண்ணெண்ணெயை பயன்படுத்தி பயோ எரிபொருளை அமெரிக்காவை சேர்ந்த டைனமிக் எரிபொருள் நிறுவனம் தயாரித்துள்ளது. இதை பயன்படுத்தி விமானத்தை இயக்கலாம். நெதர்லாந்தை சேர்ந்த கே.எல்.எம். விமான நிறுவனம், 200க்கும் அதிகமான விமானங்களில் இந்த பயோ எரிபொருளை வரும் செப்டம்பர் மாதம் முதல் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரங்களுக்கு இடையே செல்லும் விமானங்கள் இனி பயோ எரிபொருளில் இயங்கும். இதற்காக விமானத்தின் தொழில்நுட்பம் மற்றும் இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பயோ எரிபொருளின் விலை நிரந்தரமாக குறைக்கப்பட்டால், 100 சதவீதம் பயோ எரிபொருளை மட்டுமே பயன்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்படும் என கே.எல்.எம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக