ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

டிராபிக் போலீசை தாக்கிய அதிமுக பிரமுகர்கள் கைது!என்னம்மா இது


சிதம்பரம்: ஒன்-வேயில் வந்ததை கண்டித்த போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 2 அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதிமுக நகர செயலாளர் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம் தெற்கு வீதி, ஒருவழிப் பாதையாகும். இந்த வழியாக நேற்று காலை வந்த அதிமுக கொடி கட்டிய ஒரு காரை பெண் கான்ஸ்டபிள் நிறுத்த முயன்றார். நிற்காமல் செல்லவே, பச்சையப்பன் பள்ளி சிக்னல் அருகே பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ராவணனுக்கு தகவல் தெரிவித்தார்.


உடனடியாக ராவணன் அந்தக் காரை தடுத்து நிறுத்தினார். அதில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காரில் இருந்தவர்கள், ராவணனை திட்டி சட்டையை கிழித்து, தாக்கிவிட்டு சென்றுவிட்டனர்.  காயமடைந்த ராவணன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த சிதம்பரம் டிஎஸ்பி நடராஜன், இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், புகழேந்தி, கண்ணபிரான் மற்றும் போலீசார் சென்று ராணவனிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து சிதம்பரம் நகர போலீசில் ராவணன் புகார் செய்தார்.

அவரை தாக்கியது அதிமுக நகர செயலாளர் தோப்பு சுந்தர், நிர்வாகிகள் புருஷோத்தமன், சுரேஷ், சிவகுமார், அருள், முத்து என்ற சுதாகர் என்பது தெரியவந்தது. இவர்களில் புருஷோத்தமன் (36), சுதாகர் (32) இருவரையும் போலீசார் கைது செய்தனர். நகர செயலாளர் தோப்பு சுந்தர் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக