பீஜிங்: படிக்கட்டு பயணத்தை தடுக்கும் வகையில் டவுன் பஸ்களில் கதவு பொருத்தப்பட்டுள்ளது. அடிக்கடி இந்த பஸ்களில் சென்று பழக்கப்பட்டவர்கள் படியில் நின்றிருந்தாலும், கதவு திறந்து மூடும்போது சுதாரித்து நகர்ந்துகொள்வார்கள். அரிதாக ஏறுபவர்கள் கையை நசுக்கிக் கொண்டு அலறுவார்கள். இதுபோன்ற சம்பவம் சீனாவில்
நடந்திருக்கிறது. சீனாவின் அன்ஹுய் மாகாணம் மான்ஷன் நகரில் டவுன் பஸ் நேற்று சென்றுகொண்டிருந்தது. ஒரு ஸ்டாப்பில் பஸ் நின்றதும் பெண் பயணி ஒருவர் இறங்க தயாரானார். அவர் இறங்குவதற்குள் பஸ் புறப்பட்டுவிட்டது.
அவர் சுதாரிப்பதற்குள் படிக்கட்டு கதவும் மூடிக்கொண்டு விட்டது. இரு கதவுகளுக்கும் இடையே தலை சிக்கிக்கொண்டது. தலை பஸ்சுக்கு வெளியே நீட்டியிருந்ததால், அவர் கத்தியது டிரைவருக்கு கேட்கவில்லை. அருகே இருந்த பயணிகள் கூச்சல் போட்டனர். இதையடுத்து, டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி கதவை திறந்தார். கதவுகளின் ஓரத்தில் ரப்பர் ஃபீடிங் இருந்ததால் அசம்பாவிதம் இல்லை. கதவு திறந்ததும் அந்த பெண் இறங்கி சென்றுவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக