எவரும் நெருங்கி வந்து விடாதபடி கத்தியை உடைமையில் வைத்துக் கொண்டு மிரட்டினார் பையன். பொலிஸார் என்ன செய்யலாம் ? என்று அறியாமல் திகைத்து நின்றனர். பொதுமக்கள் குவிந்து நின்று வேடிக்கை பார்த்தனர்.
அப்போது வந்து சேர்ந்தார் 19 வயது இளம் யுவதி ஒருவர். பையனின் காதலி என்று சொல்லிக் கொண்டார். பையன் நின்ற இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார். பையனுடன் பேச்சுக்கள் நடத்தினார். திடீரென்று பையனை கட்டி அணைத்து முத்தங்கள் கொடுத்தார்.
இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று உணர்ந்து வேகமாக செயல்பட்ட பொலிஸார் பையனை அலக்காக தூக்கிச் சென்றனர். பையன் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றுப்பட்டார். முத்தம் கொடுத்த யுவதியோ சீன மக்களின் ஹீரோயின் ஆகி விட்டார். சம்பவங்களுடன் கூடிய காட்சிகள் இணைய உலகில் மிகுந்த பிரபலம் அடைந்து உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக