ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆண் குழந்தை தண்ணீரில் மூழ்கடித்து கொடூர கொலை!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperதாம்பரம்: பிறந்து 6 நாளே ஆன ஆண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் பெருங்களத்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தாய் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. பெருங்களத்தூர் நெடுங்குன்றம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன் (21). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (20). காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களது முதல் குழந்தை இறந்து விட்டது. இந்நிலையில் மீண்டும் ரேவதி கர்ப்பம் தரித்தார். நிறைமாத கர்ப்பிணியான ரேவதி, கடந்த 22-ம் தேதி கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருந்தனர். பின்னர் நெடுங்குன்றத்தில் உள்ள தாய் வீட்டுக்கு ரேவதி அழைத்து வரப்பட்டார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிறந்து 6 நாளே ஆன குழந்தையை தண்ணீர் டிரம்மில் அமுக்கினார் ரேவதி. சிசு என்பதால் மூச்சு திணறி தத்தளித்தது. சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது. வெளியே சென்றிருந்த தனசேகரன் வீட்டுக்கு திரும்பினார். குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார். ரேவதி ஒன்றும் தெரியாதது போல இருந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் திரண்டனர்.

பீர்க்கன்கரணை போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து ரேவதியை கைது செய்து விசாரித்தனர்.உறவினர்களிடம் போலீசார் விசாரித்தபோது, ‘ரேவதிக்கு 3 வயது இருக்கும்போது அவரது தாய் மகேஸ்வரி இறந்து விட்டார். இதனால் அவரது தந்தை ரவிச்சந்திரன், 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அதை தொடர்ந்து மகேஸ்வரியின் ஆவி ரேவதியை பிடித்துக் கொண்டது. அதனால் ரேவதிக்கு பல நேரங்களில் பித்துப் பிடித்துவிடும். எங்கே இருக்கிறோம், எங்கே செல்கிறோம் என்பது ரேவதிக்கே தெரியாது. சில வருடங்களாகவே ரேவதிக்கு இந்த பிரச்னை இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்கள்.

இப்போதுகூட, ‘என் பிள்ளையே நானே கொல்வேனா?’ என்று ரேவதி கேட்பதால், போலீசார் குழம்பிப் போயிருக்கிறார்கள். உண்மையிலேயே ரேவதி மன நலம் பாதிக்கப்பட்டவரா அல்லது கொலை செய்து விட்டு நாடகம் ஆடுகிறாரா என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 6 நாளே ஆன குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் பெருங்களத்தூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக