ஐ.நாவுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினமான நேற்று இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தமிழ் மக்களால் உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையான மெரீனாவில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடற்கரையெங்கும் எழுச்சியுடன் மெழுகுவர்த்தி ஏந்திய மக்கள் கூட்டமாகக் காட்சியளித்தது...
இந்நிகழ்வில் பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாமக வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா உட்பட பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் பழ.நெடுமாறன் உரையாற்றுகையில், “இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ் ஈழம்பெற்றுக் கொடுக்கவே இங்கே கூடியிருக்கிறோம்.
இந்த ஒற்றுமை ஒன்றுபட்டால் நம்மால் நம்முடைய எண்ணத்தை அடைய முடியும். அதற்கு இந்நிகழ்வு ஆரம்பமாக அமையட்டும்” என்றார்.
ஈழத்திலே நடந்த தமிழினப் படுகொலைக்கு எதிராக உண்மையிலேயே மாபெரும் எழுச்சியை மெரினாவில் ஏற்படுத்திய தமிழீழ ஆதரவுத் தலைவர்கள் உங்களை நம்பி தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழ்மக்களின் பிச்சைக்கார வாழ்க்கையில் இருந்து விடுபட்டு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவ வேண்டும்..
அவர்களை மரியாதையோடு நடாத்த வேண்டும்.. ஒரு இந்தியக் குடிமகனுக்குரிய அந்தஸ்துக்களை வழங்கும் வழிவகைகளைச் செய்ய வேண்டும்...
அத்தோடு இன்னமும் இலங்கையின் வடக்கு கிழக்கில் போரினால் இடம்பெயர்ந்து சொந்த இடங்களிலேயே உள்ள முகாம்களில் வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்வதாரங்களை மேம்படுத்துவதற்கான பொருளாதார ரீதியிலான உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக