ட்ரிபோலி: லிபியாவில் அதிபர் கடாபி பதவி விலக கோரி, மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக, நேட்டோ படை தாக்குதல் நடத்தி வருகிறது. லிபியா பிரச்னையை சுமுகமாக தீர்க்க பல நாட்டு பிரதிநிதிகள் கடாபியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை. இந்நிலையில், ஓட்டெடுப்பு நடத்தி மக்களின் கருத்தை அறிய தயார் என கடாபி அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கடாபி அரசின் செய்தி தொடர்பாளர் மவுசா இப்ராகிம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
கடாபி ஆட்சியில் நீடிக்க வேண்டுமா, கூடாதா என தேசிய அளவில் கருத்துக் கேட்டு ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். இது ஐ.நா மற்றும் ஆப்ரிக்க யூனியன் தலைமையில் நடக்க வேண்டும். லிபிய மக்கள் விரும்பினால், கடாபி ஆட்சியில் நீடிப்பார், இல்லாவிட்டால் பதவி விலகுவார். ஆனால் எக்காரணத்தை கொண்டும் நாட்டை விட்டு வெளியேற மாட்டார். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சொந்த நாட்டில்தான் கடாபி இருப்பார்.
இவ்வாறு மவுசா கூறினா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக