ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நயாகரா ஆற்றில் தத்தளித்த அமெரிக்கப் போலீஸ் ஐ காப்பாற்றிய ஹெலிகாப்டர் (காணொளி, பட இணைப்பு)


சீறிப்பாயும் நயாகரா ஆற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இரண்டு அமெரிக்க பொலிஸ் அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்றப்பட்டனர்.


சனிக்கிழமை நடந்த இந்த மீட்பு நடவடிக்கையில் கனடா பொலிஸ் அதிகாரி தனது உயிரை பற்றி கவலைப்படாமல் அமெரிக்க பொலிஸ் அதிகாரிகளை காப்பாற்றினார்.

காப்பாற்றப்பட்ட அதிகாரிகள் நியூயார்க்கை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அந்த அதிகாரிகள் தப்பிக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காத போது கனடா பொலிஸ் நிர்வாகம் உரிய உதவி அளித்து காப்பாற்றியது.

நயாகரா பார்க் பொலிஸ் பிரிவை சேர்ந்த ஷான் பிளாக் தனது உடலில் கயிற்றை கட்டி நயாகரா தண்ணீர் பகுதியில் இறங்கினார். அவர்கள் தண்ணீரில் தத்தளித்த படகில் இருந்து அமெரிக்க பொலிஸ் அதிகாரிகளை மீட்டார்.



நீர்வீழ்ச்சிக்கு 900 மீற்றர் தூரத்தில் இந்த சாகச மீட்பு பணி நடந்தது. பிளாக் தன்னையும் தண்ணீரில் தத்தளிக்கும் அதிகாரிகளுடன் இணைத்துக் கொண்டு ஹெலிகாப்டரில் கோட் தீவுப்பகுதிக்கு வந்தார்.

நயாகரா ஹெலிகாப்டர் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் இந்த மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. கனடா பொலிஸ் அதிகாரி தண்ணீரில் தத்தளித்த அதிகாரிகளை ஒவ்வொருவராக மீட்டு வந்து கரை சேர்த்தார்.



பொலிஸ் ஹெலிகாப்டர்கள் உடனடியாக கிடைக்காத நிலையில் தனியார் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. அதிகாலை 6 மணி அளவில் உதவி கேட்டு கனடா பொலிசாருக்கு அழைப்பு வந்தது.

இதனையடுத்த 2 மணி நேரத்தில் அதாவது 8 மணி அளவில் இரு அமெரிக்க பொலிஸ் அதிகாரிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக