விண்வெளிக்குச் சென்ற முதலாவது டீன்ஏஜ் வயதுடையவர் என்ற பெருமையை கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெற்றுக் கொள்ளவுள்ளார்.
கல்காரி பிராந்தியத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞரே இந்தப் பெருமையைப் பெறவுள்ளார்.
தனிப்பட்ட நபர்களை விண்வெளிக்கு சுற்றுலாப் பயணிகளாக அனுப்பும் நோக்கில் கோடீஸ்வரர் சேர்.றிச்சர்ட் பிரான்ஸன் வர்ஜின் கலக்டிக் என்ற பெயரில் ஒரு விண் ஓடத்தைத் தயாரித்து வருகின்றார்.
இது இறுதிக் கட்ட சோதனைகனைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது. இந்த விண் ஓடத்தில் விண்வெளிக்கு சுற்றுப் பயணம் செல்ல இதுவரை 440 நபர்கள் முன் பணம் செலுத்தியுள்ளனர்.
இதில் இந்த நபரும் ஒருவர். ஆனால் இவர் தற்போதைக்கு தன்னுடைய பெயரை வெளியிட விரும்பவில்லை. இதுவரை பணம் செலுத்தி உள்ளவர்களில் இவர் மட்டுமே 18 வயதானவர்.
18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு இந்தப் பயணத்துக்கு அனுமதி கிடையாது. 16 வயதானால் இளைஞர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெறத்தான் விரும்புவார்கள்.
ஆனால் இந்த இளைஞர் அதற்கு அப்பால் சென்று விண்வெளிக்கு பயணிக்க விரும்புகின்றார்.
இதற்கு முன் விண்வெளி சென்ற இளைஞர் என்ற பெருமை ரஷ்யாவைச் சேர்ந்த கெஹர்மன்டிடோ என்பவரைச் சாரும்.1961 ஆகஸ்டில் இவர் விண்வெளிக்குச் சென்ற போது இவருக்கு வயது 25.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக