மஹிந்திரா கீழ் செயல்பட்டு வரும் ரேவா நிறுவனத்தின் ஒரே ஒரு பேட்டரி கார் மட்டுமே நம் நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. : 4 பேர் அமர்ந்து செல்லும் வசதி கொண்ட புதிய பேட்டரி காரை மஹிந்திரா ரேவா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
சுமாரான தோற்றம், அதிக விலை, வசதிகளில் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த கார் சந்தையில் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை.
இந்த நிலையில், ரேவா பேட்டரி காரில் உள்ள குறைபாடுகளை களைந்து புதிய பேட்டரி காரை ரேவா நிறுவனம் தயாரித்துள்ளது. புதிய காருக்கு ரேவா என்எக்ஸ்ஆர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
பழைய ரேவா பேட்டரி காரில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்யலாம். ஆனால், புதிய காரில் 4 பேர் அமர்ந்து செல்லலாம். இந்த கார் இரண்டு கதவுகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கிமீ வரை பயணம் செய்யும் திறனும் கொண்ட பேட்டரியுடன் வருகிறது.
தவிர, இது மணிக்கு 104 கிமீ செல்லும் வகையிலான எஞ்சின் மற்றும் சிறந்த கட்டுமானத்துடன் வருகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த காரை பல்வேறு சாலை நிலைகளில் வைத்து ரேவா நிறுவனம் சோதனை நடத்தி வருகிறது.
இந்த சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டதாக கருதப்படுகிறது. எனவே, வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த காரை சந்தையில் அறிமுகப்படுத்த மஹிந்திரா ரேவா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதிக வசதிகள் கொண்ட இந்த பேட்டரி கார் சந்தையில் நிச்சயம் பெரிய வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக