ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மாஜி அமைச்சர் வீரபாண்டியர் சாபம் "அரசு ஊழியர்கள் நல்லா அனுபவிப்பாங்க'

 
பனமரத்துப்பட்டி: ""அரசு ஊழியர்கள் எல்லாம் நமக்கு ஓட்டு போடவில்லை. அவர்கள், இந்த ஆட்சியில், நல்லா அனுபவிப்பாங்க,'' என, மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆதங்கத்துடன் பேசினார். சேலம், பனமரத்துப்பட்டி சந்தைபேட்டையில் நடந்த தி.மு.க., பொது கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசியதாவது
: கருணாநிதி முதல்வராக பதவி வகித்த காலத்தில், குடிநீர் வடிகால் வாரியம் அமைக்கப்பட்டது. நிலத்தடி நீர் உள்ள இடத்தில் இருந்து தண்ணீர் எடுத்து, வறட்சியான பகுதியில் டேங்க் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியில், பூலாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், சேலம்- ஆத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டம், சேலம் மாநகரத்துக்கு தனிக் குடிநீர் திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட்டது. தி.மு.க., ஆட்சியில்தான், சேலம் மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில் காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரயில்வே கோட்டம், நவீன மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்கள் ஏன் மறந்தார்கள் என, எங்களுக்கு புரியவில்லை. ஓட்டு போட்ட மக்களுக்கும் தெரியவில்லை. தமிழகத்தில், மொத்தம், 2 கோடி இலவச கலர், "டிவி' வழங்கப்பட்டது. ஸ்பெக்ட்ரம் பற்றி, "டிவி'யில் பலவாறு கூறப்பட்டதால் தான், மக்கள் அதை தவறாக நினைத்துவிட்டனர். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், ஒரே உத்தரவில், ஒரு லட்சத்து, 75 ஆயிரம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. தி.மு.க., ஆட்சியில் இழந்த சலுகைகள் திரும்பவும் வழங்கப்பட்டது. ஆனால், தேர்தலில் நமக்கு அவர்கள் ஓட்டு போடவில்லை. இந்த ஆட்சியில், அவர்கள் நல்லா அனுபவிப்பாங்க. தி.மு.க., நிர்வாகிகள் சரியாக தேர்தல் வேலை பார்க்காமல் கோட்டை விட்டதால்தான் வெற்றியை இழந்தோம். இவ்வாறு அவர் பேசினார். பனமரத்துப்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், யூனியன் சேர்மன் பழனிசாமி, நகர செயலாளர்கள் வரதராஜன், சுரேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக