ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

20ஆம் நூற்றாண்டின் மிகவும் கொடூரமான நிகழ்வாக கருதப்படும் 2மில்லியன் கம்போடியர்களின் படுகொலை விசாரணை இன்று ஆரம்பம்!


கம்போடியாவில் 1975 முதல் 1979 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் சுமார் 2 மில்லியன் பேர் உயிரிழந்த வழக்கில் பிரதான சூத்திரதாரிகளாக கருதப்படும் 4 பேர் மீதான வழக்கின் விசாரணை இன்று அந்நாட்டில் உள்ள ஐ.நாவின் நீதிமன்றமொன்றில் ஆரம்பமாகியது.கம்போடியா 1975 முதல் 1979 ஆம் ஆண்டுவரை கெமர் ரூச் எனப்படும் கம்யூனிச அரசியல் கட்சியினால் ஆளப்பட்டு வந்தது.


இக்காலப்பகுதியில் கம்போடியாவின் பிரதமராகவும், கெமர் ரூச்சின் தலைவராகவும் இருந்தவர் போல் போட் எனப்படும் சர்வாதிகாரியாவார். இவரின் ஆட்சிக்காலத்தில் சுமார் 2 மில்லியன் பேர் உயிரிழந்தனர். இது அப்போது அந்நாட்டின் சனத்தொகையில் 26 வீதமாகும்.
கெமர் ரூச் ஆட்சியின் எதிரிகளாக கருத்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மக்கள் பலவந்தமாக உழவுத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேற்கத்திய மருந்துகள் மக்களுக்கு மறுக்கப்பட்டமையால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தனர். சித்திரவதை முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டதுடன் பட்டினியால் பலர் உயிரிழந்தனர்.
கம்போடியர்கள் மட்டுமன்றி சீனர்கள், வியட்நாம் இனத்தவர், தாய் இனத்தவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.பொல் போட்டின் ஆட்சியானது வியட்நாமின் போர்தொடுப்பிற்கு பின்னர் முடிவுக்கு வந்தது.இப்படுகொலைகளின் காரணகர்த்தாவான பொல் போட் 1998 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் இப்படுகொலைகளின் மற்றைய சூத்திரதாரிகளாகக் கருதப்படும் 4 பேர் ஐ.நாவின் வழக்கிற்கு தற்போது முகங்கொடுத்துள்ளனர்.இவர்களில் பொல் போட்டிற்கு அடுத்த முக்கியமான நபராக கருதப்படும் நுஹான் சே முக்கியமானவராவர்.
இவரைத்தவிர முன்னாள் ஜனாதிபதி கீயு சம்பான், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லெங் சாரி மற்றும் அவரின் மனைவி லெங் திரித் ஆகியோரும் இவ்வழக்கிற்கு முகங்கொடுத்துள்ளதுடன் இவர்கள் தங்களது குற்றத்தினை மறுத்துள்ளனர்.
20 ஆம் நூற்றாண்டின் மிகவும் கொடூரமான நிகழ்வாக கருதப்படும் இந்த இனப்படுகொலை வழக்கின் தீர்ப்பினை முழு உலகமும் எதிர்பார்த்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக