முதல்-அமைச்சர் ஜெயலலிதா 3-வது முறையாக பதவி ஏற்றபின், முதல் விழாவாக இலவச அரிசி வழங்கும் விழா இன்று நடந்தது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் நகர் கூட்டுறவு ரேஷன் கடையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த விழா ஆடம்பரம் இல்லாமல் மிகவும் எளிமையாக நடந்தது. இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட ரேஷன் கடை முன்பு சிறிய பந்தல் மட்டுமே போடப்பட்டிருந்தது. கடை முன்பு மட்டுமே தாழ்வான சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. பிரமாண்ட பேனர், பந்தல், மேடை அலங்காரம் எதுவும் இல்லை.
மிகவும் எளிமையாக நடந்த விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இலவச அரிசியை ஏழை பெண்களுக்கு வழங்கினார்.இது போல மாவட்டங்களிலும் இலவச அரிசி வழங்கும் விழா எளிமையாக நடந்தது. சில இடங்களில் துணி பந்தல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றையும் அகற்றி விட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக