ஒசாமா பின்லேன் கொல்லப்பட்ட பாகிஸ்தானின் அபோத்தாபாத் நகரில் கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷீத் லத்தீப் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்தப் போட்டியில் 2ம் நிலை பாகிஸ்தான் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதும். இது ஒரு நாள் போட்டியாக நடைபெறும்.
ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக லத்தீப் இருக்கிறார். மே மாத இறுதியில் இரு நாட்டு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
முதல் போட்டி மே 25ம் தேதி பைசலாபாத்திலும், 2வது போட்டி ராவல்பிண்டியில் 27ம் தேதியும், 3வது போட்டி அபோத்தாபாத்தில் 29ம் தேதியும் நடைபெறும் என்று லத்தீப் தெரிவித்தார்.
கடந்த 2009ம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. அதன் பின்னர் எந்த ஒரு வெளிநாட்டு அணியும் பாகிஸ்தானுக்கு வரவில்லை. இந்த நிலையில், முதல் முறையாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வரவுள்ளது. அதுவும் பின்லேன் கொல்லப்பட்ட அபோத்தாபாத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக