லிபியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் உயிர் பிழைக்க படகில், தப்பிய பல நூறு பேர் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
லிபியாவில் கர்னல் கடாபிக்கு எதிராக பிப்ரவரி 15 ஆம் திகதி முதல் புரடசிப் போராட்டம் நடந்திருக்கிறது. லிபியா ராணுவத் தாக்குதலில் பல ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், உயிர் பிழைக்க 600 அகதிகள் படகில் ஏறி, ஐரோப்பாவை அடைய முயற்சித்தனர். இந்தப் படகு திடீரென கடலில் மூழ்கியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான புலம் பெயர்ந்தோர்
தண்ணீரில் தத்தளித்தனர்.
அவர்கள் உயிர் பிழைக்க முடியாமல் மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. படகில் இருந்தவர்கள் ராணுவ ஹெலிகொப்டர் மற்றும் நேட்டோ கப்பல் அடையாளம் கண்டபோதும், படகில் இருந்த 72 பேரில் 61 பேர் தண்ணீர் தாகம் மற்றும் உணவு இல்லாததால் இறந்தனர் என கார்டியன் நாளிதழ் கூறுகிறது.
லிபியாவில் இருந்து உயிர் பிழைக்க படகில் தப்பிய மக்கள் இத்தாலியின் லாம்பெடுகா தீவுக்கு வந்தபோது விபத்தில் சிக்கினர். லிபியா தலைநகர் திரிபோலியில் இருந்து புலம் பெயர்ந்து வந்த மக்கள் படகில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. திரிபோலியர் மார்ச் 25 ஆம் திகதி புறப்பட்ட சிறியப்படகு, எரிபொருள் இல்லாமல் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக