சென்னை, மே 14- ஐநா பொதுச்செயலர் பான் கீ மூன், இலங்கை மீது போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.கொழும்பில் உள்ள நவலோக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, இவ்வாறு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.அரசு அனுமதி அளித்தால் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கத் தயாராக உள்ளேன் என்றும் பொன்சேகா கூறியதாக இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தனக்கு பதில் அளிக்க வாய்ப்பு வழங்குவதில் அரசு தயக்கம் காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக