ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சி – மமக புறக்கணிப்பு

  இந்த நிகழ்ச்சியில் நரேந்திரமோடி கலந்து கொண்டதையடுத்து பதவியேற்பு நிகழ்ச்சியை அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான மனிதநேய மக்கள் கட்சி புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர்
 நரேந்திரமோடி கலந்து கொண்டதையடுத்து பதவியேற்பு நிகழ்ச்சியை அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான மனிதநேய மக்கள் கட்சி புறக்கணித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதலவராக செல்வி ஜெயலலிதா இன்று ஏற்றார். அவரைத் தொடர்ந்து புதிய அமைச்சர்கள் 33 பேரும் ஏற்றுக்கொண்டனர். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் கவர்னர் பர்னாலா முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் செய்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, லோக்தளம் கட்சித் தலைவர் அஜீத்சிங் உள்ளிட்ட பலருக்கும் ஜெயலலிதா அழைப்பு அனுப்பியிருந்தார். இந்த அழைப்பினை ஏற்று நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு, அஜீத்சிங் ஆகியோரும், அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்டு தேசியச் செயலாளர் ஏ.பி. பரதன், தா.பாண்டியன், நல்லக்கண்ணு, ஜி.ராம கிருஷ்ணன், எழுத்தாளர் சோ, சுலோசனா சம்பத் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக