மூன்றாம் முறையாக தமிழக முதலமைச்சாராக ஜெயலலிதா வெற்றிபெற்றுள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக கூறியதையும், வக்ப்போர்டை சீர்திருத்தம் செய்வதாக அவர் கூறியுள்ளதையும் நிறைவேற்றிட வேண்டும். மேலும் கடந்த காலத்தில் முஸ்லிம்களின் வெறுப்பை பெற்றதுபோல் இந்த ஆட்சியிலும் பெறாமல், அதை நிறைவேற்றுவார் என்று நாம் நம்பிக்கை வைப்போம்.
அதற்கு அல்லாஹ் நமக்கு துணை புரியவேன்டும். யார் ஆட்சியில் இருந்தாலும் வல்ல இறைவனே நமக்கு முழுப்பொறுப்பும் பாதுகாவலனுமாவான்.
லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து!.
ஆட்சி அதிகாரத்தை வழங்குவதும்,அதை பறிப்பதும் இறைவனின் அதிகாரத்தில் உள்ளவை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் திடமாகவும் தீர்க்கமாகவும் நம்பவேண்டும். எங்களின் பிரச்சாரத்தினாலும், எங்களின் ஆதரவினாலும் தான் இவர்கள் வென்றார்கள் என்று கூறுவதெல்லாம் ஓரு மாயை!. இவைகள் எல்லாம் ஓரு கருவிகள் மட்டுமே!. நோன்பிற்கு உண்டான கூலியை தானே நேராக வழங்குவதாக கூறும் இறைவனே, நாம் நாடியவர்களுக்கே ஆட்சியை வழங்குகின்றோம் என்றும் கூறுகின்றான். மேலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் மறுமையில் இறைவனிடம் அதிக கேள்வி கணக்கிற்கும் உள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஏனெனில் அதிக பொறுப்புள்ளவர்கள் ஆட்சியாளர்கள் என்பதை இஸ்லாம் வலியுறுத்தி கூறுகின்றது. இந்த தேர்தலின் முடிவுகள் எல்லாம் நமக்கு இதையே வலியுறுத்துகின்றன. எல்லாவிதமான கருத்துகணிப்புகளையும் அடித்து நொறுக்கியே, இந்த முடிவு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுதான் மனிதர்களின் கணிப்பிற்கும், மறைவானவற்றை அறியும் திறன்படைத்த இறைவனின் வல்லமைக்கும் உள்ள வேறுபாடுகள் என்று ஒவ்வொரு முஸ்லிமும் நம்பவேண்டும்.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் முஸ்லிம்கள் அதிக அளவு போட்டியிட்டாலும், ஒருசிலரின், இயக்கங்களின் தவறான முடிவினாலும், முஸ்லிம்களிடையே உள்ள ஒற்றுமை இன்மையினாலும், இந்த தேர்தலிலும் வழக்கமாக குறைவான முஸ்லிம்களே வெற்றி பெற்றுள்ளனர். முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியில் நின்று செயல்பட்டு இருப்பார்களேயானால், இன்னும் அதிகளவில் நாம் நம்முடைய பிரதிநிதிகளை சட்டமன்றத்திற்கு அனுப்பி இருக்கலாம். எனவே வரும்காலங்களில் இதை ஓரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு, முஸ்லிம்கள் செயல்படவேண்டிய அவசியத்தையும் இறைவன் நமக்கு உணர்த்தியிருக்கின்றான்.
இந்த தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் நாம் வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதே சமயம், இவர்கள் அனைவரும் தங்களுக்கு இறைவன் வழங்கி இருக்கும் ஓரு வாய்ப்பாக கருதி, முஸ்லிம்களின் எல்லா விதமான பிரச்சனைகளையும், சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டி அதை தீர்ப்பதற்கு அனைத்து விதமான முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கின்றோம். குறிப்பாக வேட்பாளர்கள் என்னென்ன வாக்குறுதிகளை முன்வைத்து ஓட்டு கேட்டு வெற்றி பெற்றீர்களோ அதை அமானிதமாக நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளீர்கள்.
அதில் மிக முக்கியமாக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை களைவதும், இருக்கும் 3.5 சதவிகிதத்தை 5 முதல் 7 சதவிகிதம் வரை உயர்த்த ஆளும் கட்சியை வலியுறுத்தி அதை பெற்றுத்தர நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும். அதேபோல் வக்பு வாரியத்தில் உள்ள குறைகளையும் களைய தக்க நடவடிக்கைகளை எடுத்து முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தை பெருக்க உரிய நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இது அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என்றாலும், ஆளும் கட்சியின் கூட்டணியோடு இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சியை சார்ந்த உறுப்பினர்களுக்கு அதிகம் பொறுப்பு உண்டு.
இதில் இவர்கள் கடமை தவறாமல், அதை பெற்றுத்தர தக்க நடவடிக்கையை எடுக்கவேண்டும். அதிமுக கூட்டணியின் அசூரபலத்தின் மூலம் இரண்டு தொகுதியில் மமக வெற்றி பெற்றாலும், சேப்பாக்கத்தில் மட்டும் தோல்வியை பெற்றதற்கு, முக்கியகாரனங்களை ஆராயவேண்டும்.
டாக்டர் ராமதாசுக்கு வைத்தியம் பார்த்த முஸ்லிம்கள்:
கடந்த தேர்தல்களில் முஸ்லிம்களை புறக்கணித்தது போல், இந்த தேர்தலிலும் முற்றிலும் புறக்கணித்த பாமகவை, அவர் அதிகம் நம்பி இருந்த வன்னியர்கள் மூலமே அதிக தொகுதிகளில் இறைவன் தோல்வியைத் தழுவ வைத்து விட்டான். நம் துவாக்களுக்கும் இறைவன் அளித்த அங்கீகாரமே இது. பாமகவை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் முன்பு வைத்த கோரிக்கை கட்டுரை பல வலைதளங்களிலும், மின்னஞ்சலாகவும் சுற்றுக்கு வந்ததும் நினைவிருக்கலாம்!. இதுவரை இல்லாத அளவிலான மோசமான தோல்வியை பாமக சந்தித்துள்ளது. எனவே வரும் காலங்களில் முஸ்லிம்களையும் வேட்பாளர்களாக அறிவிக்கவில்லை என்றால் இதே கதிதான் பாமகவிற்கு ஏற்படும் என்பதயும் நாம் சொல்லி கொள்கின்றோம்.
பாமகவின் இந்த மோசமான நிலைக்கு அதன் போக்கும் முக்கியக் காரணம். நம்பகத்தன்மை இல்லாத செயல்பாடுகள், குடும்பத்திற்காக கட்சியை நடத்துவது, அன்புமணிக்காக சீட் கேட்டு திமுக, அதிமுக என அவர் மாறி மாறி தாவியது, பதவிக்காக எதையும் செய்யத் துணியும் அளவுக்கு கீழே இறங்கிப் போவது ஆகியவை ராமதாஸுக்கு எதிராக அமைந்து போய் விட்டது. அதை விட முக்கியமாக ஈழத் தமிழர் பிரச்சினையில் அவர் அடித்த அந்தர்பல்டியால் தமிழ் உணர்வாளர்கள் பாமக மீது கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தி விட்டது. மேலும் விஜயகாந்த்தின் எழுச்சியும், வளர்ச்சியும், பாமகவின் வாக்கு வங்கியை கடுமையாக பதம் பார்த்து விட்டதும் மறுக்க முடியாத உண்மை.
காங்கிரசை புறக்கணித்த தமிழக முஸ்லிம்கள்!.
அதேபோல் தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய தோல்வி காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது. இதுவரை அதிமுக, திமுகவுடன் இருந்து வெற்றி பெற்றுவந்த காங்கிரஸுக்கு இந்த தேர்தலில் மக்கள் கடும் பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர். பாபர்மசூதி விவகாரத்திலும், மத்தியில் இட ஒதுக்கீட்டுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை எனவும், முஸ்லிம்களை வஞ்சித்து வரும் இந்த கட்சிக்கு முஸ்லிம்களும் சேர்ந்தே தக்க பாடம் புகட்டியுள்ளனர். பாராளுமன்ற தேர்தலுக்குள் முஸ்லிம்களுக்கு மத்தியில் இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால், மத்தியிலும் இதே கதிதான் காங்கிரசுக்கு ஏற்படும் என்பதையும், அந்த கட்சி இதன் மூலம் பாடம் படிக்கவேண்டும். அதோடு அவர்கள் பெற்ற ஐந்து இடங்களும் வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கினால் கிடைத்ததே அன்றி காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றியல்ல!.
முஸ்லிம்களுக்கு மற்ற கட்சிகளை விட அதிக அளவில் இடங்களை ஒதுக்கி இருந்தாலும் திமுகவின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் மக்களின் அதிருப்தியே!. என்றால் அது நிச்சயம் மிகையாகாது. அதே போல் முஸ்லிம் லீக் கட்சி அகல பாதாளத்தில் சென்று, முஸ்லிம் மக்களிடமிருந்து அது விலகி சென்றுள்ளது. மூன்று தொகுதிகளில் திமுக வின் சின்னத்தில் போட்டியிட்டு மூன்றிலுமே தோல்வியடைந்து உள்ளனர். இதில் திமுக வெற்றி பெற்றால் நாங்கள் அமைச்சரவையில் இடம் பெறுவோம் என்று காதர்முகைதீன் கூறி இருந்ததும் குறிபிடத்தக்கது. இன்று முழு அடையாளத்தையும் இழந்து முஸ்லிம் லீக், முஸ்லிம்களிடையே வீக்காகி நிற்கின்றது. இனி இந்த கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
வெற்றி பெற்றுள்ள முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள்:
1. மனித நேய மக்கள் கட்சி சார்பில் நிறுத்திய 3 வேட்பாளர்களில் 2 பேர்கள் வெற்றிபெற்றனர்.
ஜவாஹிருல்லாஹ் - இராமநாதபுரம்
அஸ்லம் பாட்சா – ஆம்பூர்
2. அ.தி.மு.க சார்பில் சார்பில் நிறுத்திய 3 வேட்பாளர்களில் 3 பேருமே வெற்றிபெற்றனர்.
மரியம் பிச்சை – திருச்சி
அப்துல் ரஹீம் – ஆவடி
முஹம்மத் ஜான் – ராணிப்பேட்டை
3. தி.மு.க சார்பில் நிறுத்திய 4 வேட்பாளர்களில் 1 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.
மைதீன் கான் – பாளையங்கோட்டை
ஆக கடந்த சட்டமன்றத்தில் இடம் பெற்ற ஏழு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை விட, இந்த முறை ஒரு இடம் குறைவாகவே பெற்று, ஆறே முஸ்லிம்கள் சட்டமன்றத்தில் இருக்கின்றனர். இது மிகவும் வருத்தத்திற்கு உரிய செய்தியாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக