ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

வளைகுடாவில் தமிழன்...!


நாங்கள் ,
திரவியம் தேடி ஓடி வந்தோம்...!
இடையில் முகவரி மறந்தோம்..!

ல்லோன்று வாங்கிட 
இளமையை விற்றோம்...!

காதலைத் துறந்து 
வீடு மனை வாங்கினோம்...!

வாலிபத்தை கரைத்து
வங்கி கணக்கை ஏற்றினோம்...!

ளநரை பெற்றோம்,
இளைமையைத் தொலைத்தோம்,
பணம் பண்ணும்
இயந்திரங்கள் ஆனோம்...!


காற்றில்லா ஆடி,
கொலுவில்லா  புரட்டாசி,
பொரியில்லா கார்த்திகை,
கோலமில்லா மார்கழி ,
கும்மியில்லாப் பொங்கல் ,
எம்  பிள்ளைகள் 
இழந்தவை தான் எத்தனை...!

ணல் வீடு கட்ட 
ஆற்று மணலில்லை ,
கட்டிய வீட்டைக் கலைக்க 
அத்தை, மாமன்
மக்களுமில்லை...!

ழைக்கு முன் வீசும் 
மண்வாசம் நுகர்ந்ததில்லை ,
மழை பெய்த ஈரமண்ணை 
வெறும் பாதம் தொட்டதில்லை...!

ம்..ம்...
நாங்கள்,
திரவியம் தேடி ஓடி வந்தோம்,
டாலர் நாடி 
ஓடிக்கொண்டிருக்கிறோம்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக