மக்களுக்கான மாற்று அரசியல் சக்தியாக விரைவில் மாறுவோம் என தமிழநாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் குறிப்பிட்டார். 28-வது வணிகர் சங்க தின விழா மற்றும் விலைவாசி உயர்வு எதிர்ப்பு மாநில மாநாடு, என்பவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நேற்றுக் கொண்டாடப்பட்டது.
சென்னையை அடுத்த மறைமலைநகரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. இதன்போது, செய்தியாளர்களிடம் பேசிய த.வெள்ளையன் கருத்தத் தெரிவித்த போது, ஆன்லைன் வர்த்தகம், தவறான ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகள் உள்ளிட்ட ஏராளமான காரணங்கள் தற்போதுள்ள விலைவாசி உயர்வுக்கு காரணமாகின்றன. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு ஆபத்தானது. அதற்கு அனுமதிக்கக் கூடாது.
அரசாங்கங்களின் தவறான பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து மனு கொடுத்திருப்பதோடு, ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம், சாலை மறியல், கடையடைப்பு என பல்வேறு எதிர்புக்களையும் மேற் கொண்டிருக்கின்றோம். ஆனாலும் அவை எதனையும் ஆட்சியாளர்கள் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அவர்களின் தவறான பொருளாதாரக் கொள்கை இன்னமும் தொடர்கிறது. இது முழு நாட்டினதும் சுதந்திரத்துக்கே பேராபத்தினை ஏற்படுத்தும். ஆனாலும் இது குறித்து எவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
ஜந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறுகிறதே தவிர காட்சி மாறுவதில்லை என்பது தொடர்கதையாகவே உள்ளது. இந்த நிலை மாற்றத்துக்ககாக, ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே ஏற்படுத்திய எழுச்சியை போன்று, அரசின் தவறான பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக மக்கள் எழுச்சியை ஏற்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திட்டமிட்டுச் செயற்படும். மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு, தேவைப்படும் பட்சத்தில் மக்களை திரட்டி மாற்று அரசியல் சக்தியாகவும், உருவாகுவோம். இது தொடர்பான அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக