சென்னை, மே 16- போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினியை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று சென்னை வந்திருந்த மோடி, விழா முடிந்ததும் போரூர் சென்று ரஜினியை சந்தித்தார்.இதுபோல், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ரஜினியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.இதனிடையே, ரஜினியின் உடல்நிலை குறித்து இன்றும் பல்வேறு வதந்திகள் பரவியது. இந்நிலையில், ரஜினி உற்சாகமாக உள்ளதாகவும், பார்வையாளர்களை வெகுவாக குறைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக