ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

வக்ஃப் வாரியத் தலைவர் பதவியிலிருந்து அப்துல் ரகுமான் ராஜிநாமா



சென்னை, மே 17: தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் பதவியிலிருந்து அப்துல் ரகுமான் ராஜிநாமா செய்துள்ளார்.
 2006-ல் திமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) பொதுச்செயலாளர் ஹைதர் அலி தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
 2009 மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை தமுமுக எடுத்ததால் 9-6-2009-ல் வாரியத்தின் தலைவர் பதவியை ஹைதர் அலி ராஜிநாமா செய்தார். அதனைத் தொடர்ந்து புதிய தலைவராக 10-6-2009-ல் அப்துல் ரகுமான் நியமனம் செய்யப்பட்டார்.
 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்து அதிமுக அரசு பதவியேற்றுள்ள நிலையில் தலைவர் பதவியை அப்துல் ரகுமான் ராஜிநாமா செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக