ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மானிய விலை உரங்கள் விற்பனையில் ரூ. 1.34 கோடி ஊழல் 5 அதிகாரிகள் கைது


கரூர் மாவட்ட வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸôரால் கைது செய்யப்பட்ட (இடமிருந்து) பி. செல்லமுத்து, இ. பரமசிவம், பி. மீனாட்சிசுந்தரம், சி. ராஜக
கரூர், மே 17: அரசிடமிருந்து மானிய விலையில் உரங்களைப் பெற்று, அவற்றை அரசு, தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து, தமிழக அரசுக்கு சுமார் ரூ. 1.34 கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக கரூர், சேலம், திருச்சியைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் 5 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்களை கரூர் மாவட்ட வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸôர் கைது செய்தனர்.
 வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையத்தின் துணைப் பதிவாளர் சி. பாக்கியநாதன், கரூரிலுள்ள வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறையில் திங்கள்கிழமை புகார் மனு அளித்தார்.
 அதன் விவரம்:
 திருச்சியிலுள்ள தமிழ்நாடு கூட்டுறவு சந்தையியல் கூட்டமைப்பு (டான்பெட்) நிறுவனத்திடமிருந்து தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையத்தின் தனி அலுவலர் பி. செல்லமுத்து உரங்களை விவசாயப் பணிகளுக்கு வழங்குவதற்காக மானிய விலையில் பெற்று, அவற்றை அரசு, தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார்.
 2008-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற இந்த மோசடியால் அரசுக்கு ரூ. 1,33,63,261 இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இதையடுத்து, புகார் மீது விசாரணை நடத்த வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில், துணைக் கண்காணிப்பாளர் ஏ. சூர்யகலா தலைமையில், ஆய்வாளர்கள் வேணுகோபால், ரவிச்சந்திரன், அயுப்அலிகான், விஜயகுமார், சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய தனிப் படை அமைக்கப்பட்டது.
 தனிப் படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தாந்தோன்றிமலை அக்ரோ சர்வீஸ் முன்னாள் தனி அலுவலர் பி. செல்லமுத்து (48), (உர ஊழல் விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்), திருச்சி டான்பெட் துணை மேலாளர் இ. பரமசிவம் (57), திருச்சி வேளாண்மைத் துறை உதவி இயக்குநராக இருந்து, தற்போது ஸ்ரீரங்கம் வேளாண்மை துணை இயக்குநராக பதவி வகித்து வரும் பி. மீனாட்சிசுந்தரம் (53), கரூர் மாவட்டம், காகிதபுரத்திலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தின் பொது மேலாளர் சி. ராஜகோபாலன் (53), உதவிப் பொது மேலாளர் (கொள்முதல்) எஸ். கல்யாணசுந்தரம் (56) ஆகியோரை தனிப் படையினர் கைது செய்து, செவ்வாய்க்கிழமை கரூர் கொண்டு வந்தனர்.
 அவர்களிடம் துணைக் கண்காணிப்பாளர் விசாரணை நடத்திய பின்னர், குளித்தலை குற்றவியல் நடுவர் நீதித் துறை எண். 1-ல் ஆஜர்படுத்தப்பட்டனர்.
 இதுகுறித்து துணைக் கண்காணிப்பாளர் ஏ. சூர்யகலா கூறியது: விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக பெறப்பட்ட உரங்களை அரசு, தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்த வகையில் அரசுக்கு ரூ. 1.34 கோடி அளவுக்கு இழப்பீடு ஏற்படுத்திய தாந்தோன்றிமலை அக்ரோ சர்வீஸ் தனி அலுவலர், உரங்களை வழங்குவதற்கு உறுதுணையாகச் செயல்பட்டவர்கள், உரங்களைப் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இதுவரை 5 பேரைக் கைது செய்துள்ளோம். இதில் தொடர்புடைய மேலும் சிலர் விரைவில் கைது செய்யப்படுவர் என்றார் அவர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக