ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அவலம்!

காசி ஹிந்துக்களுக்கு புனித நகரம். பலரும் வாழ்வில் ஒருமுறையாவது காசி சென்று அங்கு ஓடும் கங்கையில் தலைமுழுகி தங்களது பாவங்களைக் கழுவ விரும்புவர். மரணம் நிகழும் போது காசியில் இருக்க விரும்புவர்.


அதற்காக சிலர் வயோதிகத்தில் காசி சென்று, அங்கேயே தங்கி விடுவர். இப்படிச் செல்பவரில் கணிசமான மக்கள் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இப்படியான வயோதிகர்களைப் பராமரிக்க சில மடங்கள் கூட அங்கு உள்ளதாம். தங்களது ஆன்மா காசி மண்ணில் இருந்து வெளியேறினால் நேரடியாக சொர்க்கத்தில் சீட் கிடைக்கும். மறுப்பிறப்பும் கிடையாது என்ற நம்பிக்கையே அதற்கு காரணம்.
இதனால் காசியின் கங்கைக் கரை 24மணிநேர சுடுகாடாக இயங்குகிறது. ஒரு உடல் முழுமையாக எரியும் வரை அனுமதிப்பது அந்த உடலில் வசித்த ஆன்மா செய்த புண்னியத்தைப் பொருத்தது. ஆம் பெரும்பாலான உடல்கள் பாதி எரிந்த நிலையில் தண்னீரில் தள்ளி விடப்படுமாம். இறப்பவர்கள் சாமியார்கள் எனில் அவ்வுடலை எரிப்பதில்லையாம். அப்படியே தண்னீரில் விட்டுவிடுவார்களாம். இதில் அஹோரி என்றழைக்கப்படுபவர்கள், காசியில் வசிக்கும் சாமியார்களில் ஒரு பிரிவினர். இவர்கள் இறந்த உடலை சாப்பிடும் வகையினர். இப்படி பிணம் சார்ந்த பெருமைகள் நிறைந்தது காசி.
ஆன்மீக மொழியில் ஆன்மா(உயிர்) வசித்த வீடு தான் உடல். ஆன்மா வெளியேறிய பிறகு பல வருடங்கள் வசித்த அந்த வீட்டை நன்றியுணர்வோடு உறவு சார்ந்தவர்களால் நல்லவிதமாக அடக்கம் செய்ய வாய்ப்பளிப்பதே வசித்தவர் வீட்டுக்கு செய்யும் சிறந்த மரியாதையாகும். அல்லது அடுத்து வாழும் மனித சமூகத்திற்கு பயன்படும் விதத்தில் அவ்வுடலை ஆய்வுப் பணிகளுக்கு வழங்கினால் மேலும் மரியாதைப் பெறும் அவ்வுடல்.
இப்படி எதுவும் இல்லாமல் பல ஆண்டுகள் வசித்த வீட்டை வெறுமென தண்ணீரில் தள்ளி அழுக வைத்து, மற்றவர்களை அசூசைப்பட வைத்து, நாய் நரிகளால் தூண்டாடப்பட்டு, நாற்றம் எடுக்க வைத்து, அதே மண்ணில் வாழும் மற்ற மனிதர்களுக்கு நோய்ப்பரப்பும் காரணியாக மாறும் அவலம் தான் அந்த வீடு பெற்ற பேறாக இறுதியில் அமைகிறது. இதுதான் அந்த வீட்டில் வசித்தவர் இறுதியில் தான் வசித்த வீட்டிற்கு செய்யும் மரியாதை!

  பலவற்றில் சற்றே சங்கடத்தோடு பார்க்கமுடிந்த சிலவற்றை இதில் வெளியிடுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக