மேலும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனை கொச்சைப்படுத்துவது அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவது போன்ற செயல்கள் இனியும் தொடருமானால், மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு வழங்கி வரும் ஆதரவை தாம் மறுபரிசீலனை செய்யவேண்டி வரும் என்று ரஸ்யாவும் சீனாவும் கூறியுள்ளன.
அத்துடன் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மீது மேற்கொண்டு வரும் எதிர்ப்பு அறிக்கைகளையும் கருத்துக்களையும் அரசாங்கம் குறைக்கவேண்டும். பான் கீ மூனின் உருவப்பொம்மை அண்மையில் பரவலாக சிங்களவர்களால் எரிக்கப்பட்ட சம்பவங்களை அடுத்தே ரஸ்யாவும் சீனாவும் இந்த எச்சரிக்கையை இலங்கைக்கு விடுத்துள்ளன. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக