ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு விட்டார்


உலகத்தையே ஆட்டிப்படைத்து, அலைய விட்ட  ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார்.  இஸ்லாமாபாத் அருகே அப்போடாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை பாகிஸ்தானின் சிஐஏ உதவியுடன் அமெரிக்கப் படையினர் கொன்றுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.


இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி என்றும் ஒபாமா வர்ணித்துள்ளார்.

இதுகுறித்து முப்படைத் தளபதிகள் புடை சூழ வாஷிங்டனில் ஒபாமா செய்தியாளர்களிடம் பேசுகையில், இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு விட்டார். அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பின்லேடன் பதுங்கியுள்ள இடம் குறித்த உறுதியான தகவல் படையினருக்குக் கிடைத்ததும் என்னிடம் தெரிவித்தனர். நான் உடனடியாக  நடத்தி பின்லேடனைக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். அதன்படி நடந்துள்ளது.
இத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. தொடர்ந்து அதில் ஈடுபடுவோம் என்றார்.
டிஎன்ஏ பரிசோதனையின்படி ஒசாமா இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில்...
பின்லேடன் கொல்லப்பட்ட இடம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அந்த இடத்தின் பெயர் அப்போடாபாத். இது இஸ்லாமாபாத்திலிருந்து 2 மணி நேர தொலைவில் உள்ளது. கல்வி நிறுவனங்களுக்குப் பெயர் போனது இந்த நகரம். மேலும் இந்தப் பகுதியில் பல தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் மிகச் சிறந்த சுற்றுலாத்தளமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக