ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பத்தாம் வகுப்பு தேர்வு-கோவை சிறை 100% தேர்ச்சி

கோவை: கோவை சிறையில் எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு எழுதிய ஆறு கைதிகளும் தேர்ச்சி பெற்றனர்.
சிறைக்குள் படிப்பு
சிறையில் தண்டனை பெற்ற கைதிகள் பலரும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளில் பெருமளவில் பங்கேற்கின்றனர். படிக்க ஆர்வமுள்ள கைதிகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், அதிகம் படித்துள்ள சக கைதிகளும் உதவி செய்து வருகின்றனர். இதனால் கோவை மத்திய சிறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பட்டதாரிகளாக மாறியுள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு

இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., தேர்வினை ஆயுள் தண்டனை கைதிகளான அமிர்தராஜ், மோகன், வஞ்சிமுத்து, ராஜா மற்றும் கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்ற கோபியைச் சேர்ந்த முருகன், கொள்ளை வழக்கில் தண்டனை பெற்ற விஜயகாந்த் ஆகிய ஆறு பேரும் எழுதினர். இவர்கள் அனைவரும் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது நேற்று வெளியான தேர்வு முடிவுகளில் தெரிய வந்தது. இவர்களுள் கற்பழிப்பு வழக்கில் கைதான முருகன் முடிவுகள் வெளியாகும் முன்னரே விடுதலையாகி விட்டார்.

வாழ்த்து

தேர்ச்சி பெற்ற 5 கைதிகளும், சிறை கண்காணிப்பாளர் முருகேசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு இனிப்பும், பேனாவும் வழங்கிய முருகேசன் ஐவரையும் பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக