ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கருணாநிதிக்கு சோப்பு போடும் இளங்கோவன்!!!


ஈரோடு, ஏப். 2, முதல்- அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்ட ஜனநாயக முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடந்தது.

இதில் முன்னாள் மத்திய மந்தி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:- தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் மிகச்சிறந்த திட்டங்களை அறிவித்துள்ளது.

இந்த திட்டங்கள் எல்லாம் நூற்றுக்கு நூறு நிறைவேற்றப் படும் என்று நம்புங்கள். கடந்த தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி சொன்னதை அப்படியே நிறைவேற்றி வெற்றிகொடி நாட்டி இருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

சென்ற தேர்தல் அறிக்கையின்போது ஏழைகளுக்கு இலவச கலர் டெலிவிஷன் வழங்கப்படும் என்று சொன்னபோது நானும், ப.சிதம்பரமும் சாத்தியம் இல்லை என்று பேசிகொண்டோம். பின்னர் பொருளாதார மேதையான சிதம்பரம் இரவு முழுவதும் யோசித்து விட்டு சாத்தியம் என்றார்.

கலைஞர் சிறந்த எழுத்தாளர். அரசியல் வாதிகளில் எல்லாம் மிகச்சிறந்த அரசியல்வாதி. கடுமையான உழைப்பாளி. அவர் சிறந்த பொருளாதார நிபுணர். என் உள்மனதில் இருந்து சொல்கிறேன் கடந்த தேர்தல் அறிக்கையில் சொன்னபடி விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தார்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ ரேசன் அரிசி வழங்கினார். இப்போது மாணவர்களுக்கு லேப்- டாப் தருவேன் என்று அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் எல்லாம் இலவசம் என்று சிவப்பு சட்டைக்கார்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.

ஆனால் கல்கத்தாவில் ஒரு ரூபாய்கு ஒரு கிலோ அரிசி தருவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார்கள். இந்த ஆட்சியில் நல்ல பால காரியங்கள் தொடர வேண்டும். எனவே தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் களை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக