இந்திய மக்கள் தொகை 121 கோடியை தாண்டியிருக்கிறது. 2011 சென்சஸ் சொல்லும் எண்ணிக்கை. உலகின் முதலாவது என்ற பெருமை நமக்கு கிடைக்கவில்லை. சீனா தொடர்ந்து தடுக்கிறது. சென்ற ஆண்டு அங்கே சென்சஸ் நடந்தது. 134 கோடி தலைகள் எண்ணப்பட்டன. உலக மக்களில் பதினேழரை சதவீதம் இந்தியர்கள். ஆனால் பூமியின் பரப்பில் இரண்டரை சதவீதம்கூட இல்லை நமது நாடு.
பத்து வருடங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கிறது இந்தியா. பெரிய பணி. 25 லட்சம் அலுவலர்கள் ஆறு லட்சம் கிராமங்கள், ஏழாயிரம் நகரங்களில் வீடு வீடாக ஏறி இறங்கி தகவல் சேகரித்துள்ளனர். மேலோட்டமான விவரங்கள் மட்டும் இப்போது வெளியாகி உள்ளன. முதல் தகவல் அறிக்கை மாதிரி. பத்து ஆண்டுகளில் 18 கோடி பேர் அதிகரித்துள்ளனர். எழுத படிக்க தெரிந்தவர்கள் ஒன்பது சதவீதத்துக்கு மேல் & 65ல் இருந்து 74க்கு & உயர்ந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். அதிலும் ஆண்களைவிட அதிகமான பெண்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக வந்திருப்பது நாட்டுக்கு பயனளிக்கும் அம்சம். என்றாலும், மொத்த மக்களில் 32 கோடி பேர் எண்ணும் எழுத்தும் அடையாளம் காணும் நிலையில் இல்லை என்பது வருத்தம் தருகிறது.
அதே போன்று, பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருவதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பெண் சிசு கொலைக்கு எதிரான பிரசாரமும், கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை கண்டுபிடிப்பதற்கான சோதனைக்கு விதித்த தடையும் எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பது தெளிவாகிறது. பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் முன்னணியில் நிற்கும் மாநிலங்களில் பெண் குழந்தைக்கு மரியாதை இல்லை என்கிறபோது இந்த பிரச்னைக்கு முற்றிலும் புதிய தீர்வை அரசு தேட வேண்டியிருக்கிறது. விழிப்புணர்வு சம்பந்தமானது அல்ல பிரச்னை.
மற்றபடி, தமிழகத்தின் ஜனத்தொகை 7.21 கோடியை தாண்டினாலும் உ.பி (20 கோடி), மகாராஷ்டிரா (11), பிகார் (10), மேற்கு வங்கம் (9), ஆந்திரா (8.46) ஆகியவற்றுக்கு அப்புறம்தான் நிற்கிறோம். ‘அளவான குடும்பம் அழகான குடும்பம்’ என்ற புதுமொழி தமிழர்கள் மனதில் நிறைந்திருப்பது புரிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக