ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

வாயு தொல்லை என்று கிழங்கை ஒதுக்காதீர்கள் ?

இயற்கை மருத்துவம்–கிழங்கு வகை காய்களில் கிடைக்கும் அதிசய சத்துக்கள்இயற்கைமருத்துவம் – கிழங்கு வகை காய்களில் கிடைக்கும் அதிசய சத்துக்கள்

உணவே மருந்து என்பது ஆன்றோர் வாக்கு மண்ணில் விளையும் காய்கறிகள் மகத்தான சத்துக்களை கொண்டுள்ளது. பூமிக்கடியில் புதையலாய் பொதிந்து கிடக்கும் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் பற்றிய தகவல்கள்:


வேரில் சத்துக்களை சேமிக்கும் கிழங்குவகை காய்கறிகள் மாவுச்சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளன. இவை உடலில் உள்ள சர்க்கரையின் அளவையும், மாவுப்பொருளின் அளவையும் சம நிலையில் வைப்பதில் உதவி புரிகின்றன. தினமும் உட்கொள்ளும் காய்கறிகளில் உள்ள சத்துக்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

உருளைக்கிழங்கு: உலகின் பெரும்பாலான மக்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் உருளைக்கிழங்கில் அரிசியில் உள்ளதை விட அதிகமான சத்துக்கள் உள்ளன. இதில் மாவுச்சத்தும் உயிர் சத்துக்களும் உள்ளன. இரும்பு மற்றும் புரதச்சத்தும் இந்த கிழங்கில் காணப்படுகின்றன.

பீட்ரூட்: இனிப்புதன்மை அதிகம் கொண்ட இந்த காய் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. அதிக அளவு குளுக்கோஸ் சத்து நிறைந்தது. ரத்தத்தை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு.

கருணைக்கிழங்கு: காரும் கருணை காரா கருணை என இரு வகை உண்டு. பிடிகிழங்கு காரும் தன்மையுடையது. காராக்கருணை சேனைக்கிழங்கு வகையைச்சார்ந்தது. இதில் வைட்டமின் சத்துக்களும், மாவு மற்றும் புரதச்சத்துக்களும் உள்ளன.

சேப்பைக்கிழங்கு: நான்கு வகை சேப்பைக்கிழங்குகள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ.பி. என்ற உயிர்சத்தும் இரும்பு மற்றும் புரதச்சத்தும் உள்ளன.

மரவள்ளிக்கிழங்கு: இனிப்புச்சுவை நிறைந்த இந்த கிழங்கு உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. புரதம், கால்சியம் சத்துக்கள் இதில் உள்ளன.

பனங்கிழங்கு: சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த இந்த கிழங்கில் புரதச்சத்தும், சில உயிர்சத்துக்களும் உள்ளன. மலச்சிக்கலைப்போக்கும், பசியை அதிகரிக்கும்.

வாழைக்கிழங்கு: வாழைத்தண்டுக்குள்ள மருத்துகுணம் இதற்கு உண்டு சிறுநீரகம் தொடர்பான தொல்லைகள் நீங்கும். சிறுநீரிலும், வயிற்றிலும் தங்கியுள்ள கற்களை கரைத்துவிடும் ஆற்றல் இந்த கிழங்கிற்கு உண்டு.


மரவள்ளிக்கிழங்கு 


தேவையான பொருட்கள்;
மரவள்ளிக்கிழங்கு - அரைக் கிலோ
தேங்காய்த்துருவல் -3டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
வெங்காயம் - 1பெரியது
எண்ணெய் -2டேபிள்ஸ்பூன்
கடுகு -அரைடீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
கருவேப்பிலை - 2இணுக்கு
உப்பு - தேவைக்கு.

மரவள்ளிக்கிழங்கை நன்கு மண் போக அலசி சிறிது நேரம் தண்ணீரில் போட்டு எடுக்கவும்.

இப்படி துண்டு போட்டு கொள்ளவும்,தண்ணீரில் போட்டு எடுத்தால் ஈசியாக கட் செய்யலாம்.சீக்கிரம் வெந்தும் விடும்.

துண்டு போட்ட கிழங்கை ஸ்டீமரில் அல்லது குக்கர் அல்லது இட்லி பாத்திரத்தில் 20-30நிமிடங்கள் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

அவித்த கிழங்கை தோல் உரித்து கொள்ளவும். அவித்த கிழங்கை உப்பு கூட சேர்க்காமல் அப்படியேயும் சாப்பிடலாம்.

கிழங்கு ஆறியவுடன் இப்படி துருவிக்கொள்ளவும்.

துருவிய கிழங்கில் தேங்காய் துருவல்,மஞ்சள் தூள்,சிறிது உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, மிளகாய்வற்றல்,
கருவேப்பிலை தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.


துருவி ரெடி செய்த கிழங்கை சேர்த்து பிரட்டவும்.

இப்படி சேர்ந்து அருமையாக உதிரியாக வரும்.ருசி பார்க்கவும்.

சுவையான மரவள்ளிக்கிழங்கு வறை ரெடி.இதனை மாலை நேர டிஃபனாக சாப்பிடலாம், சாதம், கருவாட்டு குழம்புடனும் பரிமாறலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக