இடைக்கால யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கோரியுள்ள லிபிய அதிபர் மௌம்மர் கடாபி தான் ஒரு போதும் என் நாட்டை விட்டு வெளியேற போவதில்லை என தெரிவித்துள்ளார்.
இன்று (சனிக்கிழமை) காலை தேசிய தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில்,
என்னை யாரும் கட்டாயப்படுத்தி நாட்டைவிட்டு விரட்ட முடியாது. என் நாட்டுக்காக போராடுவதையும் யாரும் தடுத்துவிடமுடியாது. பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன். ஆனால் நேட்டோ படைகள் முதலில் தாக்குதலில் நிறுத்தவேண்டும். அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு இணங்க வேண்டும்.
நாங்கள் கடல் தாண்டி, அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துகிறோமா?, ஏன் எங்கள் நாடுகள் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள்? உங்களது எண்ணெய்த்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அதில் எந்த வித சிக்கலும் ஏற்பட போவதில்லை.
ஆனால் நீங்கள் பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காட்டாவிடின், லிபிய மக்கள் ஒரு போதும் சரணடைய மாட்டார்கள். உங்களது தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்யவதற்கு கூட அவர்கள் தயார்.
எப்படியாயினும் நீங்கள் தான் அழிந்து போக போகிறீர்கள். நாம் சரணடைய போவதில்லை. எமக்கு பயமில்லை. நாம் வெளியேற போவதில்லை.
எம்மீதான, நேட்டோ படைகளின் தாக்குதல்களை நிறுத்துமாறு, ஐ.நா சபையினருக்கு ரஷ்யா, சீனா மற்றும் ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் நேட்டோபடைகளுக்கு ஆதரவாக போரிடும் புரட்சிப்படையினரையும் கடும் விமர்சனம் செய்தார். 'ஏன் எமக்குள் அடிபட்டுகொள்கிறீர்கள். நாம் ஒரு குடும்பம்.' என அவர் தெரிவித்தார்.
மேலும் தமது இராணுவ தாக்குதலில் 1000 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதையும் முற்றாக மறுத்தார்.
குறித்த தேசிய தொலைக்காட்சி அலுவலகத்திலிருந்து கடாபி தனது உரையை முடித்த சிறிது நேரத்தில், அக்கட்டிடத்தின் அருகில் உள்ள கட்டிடம் மீது நேட்டோ படைகள் விமானக்குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக